திங்கள், 12 டிசம்பர், 2011

ஷாரூக்கானுடன் காதல் இல்லை: பிரியங்கா சோப்ரா


நடிகர் ஷாரூக்கானுடன் காதல் இல்லை என்று நடிகை பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.
நடிகை பிரியங்கா சோப்ரா, ஷாரூக்கானுடன் நெருங்கிப் பழகுவதும், அவருக்காக தனி அக்கறை எடுத்துக் கொள்வதையும் மும்பை திரையுலகத்தினர் பலர் அறிவார்கள்.
இதனால் ஷாருக்கானும், பிரியங்கா சோப்ராவும் காதல் வயப்பட்டிருப்பதாக மும்பை சினிமா பத்திரிகைகள் எழுதின.
ஆனால் இந்த மாதிரியான பேச்சு பரவுவதை தடுக்க பிரியங்கா இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இந்நிலையில் ஒரு படப்பிடிப்பில் அவர் கூறியதாவது: ஷாரூக்கான் மீது எனக்கு எந்த ஈர்ப்பும் இல்லை. அவர் நடிப்பை பாராட்டுவதால் பத்திரிகைகள் அப்படி எழுதுகின்றன.
அவர் ஒரு அருமையான நடிகர். புத்திக் கூர்மையுள்ள அவருடன் நடிப்பது யாருக்கும் விருப்பமாக இருக்கும். அவருடைய நடிப்பை டான்-2ல் நீங்கள் கவனித்தால் தெரியும்.
இப்படத்தில் அவர் காண்போர் அனைவரையும் பரவசப்படுத்தி விடுவார் என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக