திங்கள், 12 டிசம்பர், 2011

'நிமிர்ந்து நில்’ படம் ‘பறக்கும் படை’யாக பெயர் மாறியது


ஜெய் ஆகாஷ் நடித்து வரும் ‘நிமிர்ந்து நில்’ படம், ‘பறக்கும் படை’ என்று பெயர் மாறியது.
இது, ஒரு துப்பறியும் கதை. கதாநாயகனும், கதாநாயகியும் தேன்நிலவுக்கு செல்கிறார்கள்.
போன இடத்தில், கதாநாயகன் காணாமல் போய் விடுகிறான். காணாமல் போன கதாநாயகனை ஒரு வருடமாக தேடி, போலீஸ் கண்டுபிடிக்கிறது. கதாநாயகன் காணாமல் போன மர்மம் என்ன? என்பதே திரைக்கதை.
காணாமல் போன கதாநாயகனை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக ஜெய் ஆகாஷ் நடிக்கிறார். மறைந்த நடிகை பிரதியுக்ஷாவின் தம்பி கிருஷ்ணா இந்த படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார்.
இவருக்கு ஜோடியாக மும்பை மாடல் அழகி அர்ச்சனா பட்டேல் நடிக்கிறார். வில்லனாக, மோகன் கிருஷ்ணா நடிக்கிறார். ‘ஒத்திகை’ படத்தை இயக்கிய ஏ.எம்.பாஸ்கர், கதை, திரைக்கதை,வசனம் எழுதி, தயாரித்து டைரக்டு செய்கிறார்.
ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்ய, ஜான் பீட்டர் இசையமைக் கிறார். பி.ஆர்.என்டர்டைன்மெண்ட் நிறுவனம் சார்பில் இந்த படம் தயாராகிறது. படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடை பெறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக