திங்கள், 12 டிசம்பர், 2011

முகமூடி படத்திற்கு தயாராகும் ஜீவா


மிஷ்கின் தனது கனவுப்படம் என்று கூறி வரும், 'முகமூடி' நாளை மறுநாள் அதிகாரப்பூர்வமாக படப்பிடிப்பை தொடங்க இருக்கிறது.
தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஹீரோ படம் என்று மிஷ்கின் வலியுறுத்தும் 'முகமூடி'யில் ஜீவா ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருக்கிறார்.
இப்படத்தின் வில்லனாக நரேன் நடிக்கிறார். தனது 'யுத்தம் செய்' படத்திற்கு இசையமைத்த 'கே'வையே 'முகமூடி'க்கும் இசையமைக்க அமர்த்தியிருக்கிறார் மிஷ்கின். இந்தப்படம் பற்றி தனஞ்செயன் தனது டிவிட்டரில் "முகமூடி படம் மிஷ்கின் மற்றும் ஜீவாவின் கனவுப் படம்.
12-ம் திகதி காலை சென்னையில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் 'முகமூடி'யை தொடங்குகிறோம். ஒரே ஷெட்டியூலில் மொத்த படத்தையும் முடிக்க இருக்கிறார் மிஷ்கின். அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக இப்படம் வெளிவரும்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளியிடுகிறோம். ஜீவாதான் இப்படத்தில் சூப்பர் ஹீரோவாக நடிக்கிறார். அவரது ஆர்வம், உழைப்பை பார்க்கும் போது வியப்பாக இருக்கிறது.
திங்கள் கிழமை நடைபெற இருக்கும் பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தப் படத்திற்காக ஜீவா எப்படித் தயாரானார் என்பதை திரையிட்டு காட்ட இருக்கிறோம் என்று குறிப்பிட்டு எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக