திங்கள், 12 டிசம்பர், 2011

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி கர்ப்பமாகியுள்ளார்


இந்தியாவில் பிரபலமான பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி கர்ப்பமாகியுள்ள தகவலை ட்விட்டரின் மூலம் தெரிவித்துள்ளார்.
தமிழ் மற்றும் பாலிவுட்டில் முன்னணி நடிகைகளுள் ஷில்பா ஷெட்டியும் ஒருவர். இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் 20-20 கிரிக்கட் அணியின் உரிமையாளராகவும் உள்ளார்.
நடிகை ஷில்பா ஷெட்டி தனது வியாபார பங்குதாரர் ராஜ் குந்த்ராவை கடந்த 2009ல் திருமணம் செய்து கொண்டதற்கு பின்பு தற்பொழுது கர்ப்பமாகி உள்ளார்.
நான் கர்ப்பமாகி விட்டதால் எங்கள் குடும்பத்துக்கு புதிய விருந்தினர் ஒருவர் வரப் போகிறார் என்றும் எல்லாரும் எனக்கு வாழ்த்து சொல்லுங்கள் என்றும் தனது டிவிட்டர் வலைதளத்தில் ஷில்பா ஷெட்டி கூறியுள்ளார்.
நடிகை ஷில்பா ஷெட்டியைத் தொடர்ந்து நடிகை லாரா தத்தா, செலினா ஜெட்லி ஆகிய பாலிவுட் பிரபல நடிகைகளும் தற்பொழுது கர்ப்பமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக