திங்கள், 12 டிசம்பர், 2011

இசையமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதருக்கு கிடைத்த கசப்பான அனுபவங்கள்


தமிழ் திரையுலகில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களைப் பற்றி இசையமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் இயக்குனர் ஷங்கர் தயாரித்த காதல் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜோஸ்வா ஸ்ரீதர், வித்தகன் மற்றும் வெப்பம் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இசையமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதர், என்னிடம் திரைப்படங்களில் வெற்றி பெற்ற பாடலைக் காட்டி அந்த மாதிரியான பாடலை அமைத்துத் தாருங்கள் என்று சிலர் கேட்கிறார்கள். ஆனால் இதில் எனக்கு உடன்பாடு கிடையாது.
இந்த காரணங்களாலேயே நிறைய வாய்ப்புகளை இழந்துள்ளேன். சிறிய அளவில் திரைப்படம் தயாரிப்பவர்கள், நிர்ணயித்த சம்பளத்தை சரியாக தருவதில்லை. மேலும் நான் வேறு திரைப்படத்தில் வேலை பார்க்கும் பொழுது தொந்தரவு கொடுக்கிறார்கள்.
இதனாலேயே நான் இப்போது தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைப்பதை குறைத்துக் கொண்டேன். தற்பொழுது கன்னட மொழியில் சில திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறேன் என்று இசையமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதர் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக