திங்கள், 12 டிசம்பர், 2011

கார்த்தியுடன் இணைந்து நடிக்கும் நிகிதா


முரண் படத்தில் சேரன் உடன் இணைந்து நடித்த நிகிதா பட உலகின் தடையை மீறி பிஸியாக படங்களில் நடிக்க முயற்சித்து வருகிறார்.
கொலிவுட்டில் பொருத்தமான ரோலில் நடிக்க நிகிதா காத்திருக்கிறார். இன்னும் இதுவரை பெயர் சூட்டப்படாத தமிழ் படத்தில் நடிக்கிறேன்.
இதில் நாயகன் கார்த்தி, அனுஷ்கா இருவருடனும் இணைந்து நடிக்கிறேன். இந்தப்படத்தில் வரும் என் கதாபாத்திரம் பற்றி இப்போது எதுவும் பேசமுடியாத நிலையில் உள்ளேன்.
என் சம்பந்தப்பட்ட காட்சிகளில் நடித்து முடித்த பிறகே படத்தில் நடித்தது பற்றி பேசுவேன். கார்த்தியுடன் படத்தில் நடித்த பின், தமிழில் எனக்கு பொருத்தமான பட வாய்ப்புகளை மட்டுமே ஏற்று நடிக்க திட்டமிட்டுள்ளேன் என்று நிகிதா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக