திங்கள், 12 டிசம்பர், 2011

கொமெடியன் விவேக்கின் இயக்குனர் அவதாரம்


கொலிவுட் படங்களில் நகைச்சுவையோடு சமூக நலக்கருத்துக்களையும் கூறி வந்த நட்சத்திர கொமெடியன் விவேக் தற்போது படம் ஒன்றை இயக்கப்போவதாக பட வட்டாரம் கூறியுள்ளது. 
பொழுது போக்கு அம்சத்தோடு  பொதுநல கருத்தை வலியுறுத்தும் விதத்தில் படம் ஒன்றை எடுக்க திட்டமிட்டுள்ளேன்.
இதற்க்கான வேலையில் இறங்கியுள்ளேன், இன்றைய தலைமுறையினருக்கு பசுமையான சூழலின் முக்கியத்துவத்தை இப்படம் உணர்த்தும்.
போரடிக்கிற 'டாக்குமெண்டரியாக' இந்தப்படம் இருக்காது. சுற்று சூழலைப்பற்றிய வித்தியாசமான படமாக இருக்கும். இதில் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகள், மசாலா, கொமெடிக்காட்சிகள் ஆகியவற்றிற்கு கொஞ்சமும் பஞ்சமிருக்காது என்று கூறியுள்ளாராம் விவேக்.
சுற்று சூழலை மையமாக வைத்து படத்தை இயக்க பட உலகில் உள்ள பிரபலமான படக்கம்பெனியிடம் விவேக் பேசி வருகிறார்.
இந்தப்படத்தில்  முக்கியமான ரோலில் நடிப்பது குறித்து விவேக் இன்னும் முடிவெடுக்கவில்லையாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக