![]() |
பெரிய போட்டோகிராபராக வரவேண்டும் என்கின்ற கனவுகளையும் லட்சியத்தையும் தனக்குள்ள வைத்துக்கொண்டு அதற்காக உழைத்துக்கொண்டிருக்கின்றார் கார்த்திக் (தனுஷ்).![]() அந்த நேரத்தில முட்டி மோதிக்கிறாங்க கார்த்தியும், யாமினியும். அதற்கு பிறகு படிப்படியாக கார்த்திக்கிட்ட தன் மனசை இழக்கிறாள் யாமினி. தன் நண்பன் லவ் பண்ற பொண்ணாச்சே.. அப்படின்னு ரொம்பவே யோசிக்கிறான் கார்த்திக். கடைசியில இரண்டு பேரும் லவ் பண்ண ஆரம்பிச்சிடுறாங்க. இதற்கு மேலயும் வெயிட் பண்ண வேணாம்னு நினைக்கிற சுந்தரோட அப்பா கார்த்திக்கும், யாமினிக்கும் கல்யாணத்தைப் பண்ணி வைக்கிறாரு. லைப் நல்லாவே போய்க்கிட்டிருக்கிற போது கார்த்திக் யாருகிட்ட அஸிஸ்டென்டா சேரணும்னு நெனச்சானோ அந்த போட்டோகிராபர், கார்த்திக் எடுத்த போட்டோவை தான் எடுத்த போட்டோ என்று சொல்லி அந்த படத்திற்கு விருது வாங்கி விடுகிறார். இதைப் பார்த்த அதிர்ச்சியில் மாடியில் இருந்து கீழே விழும் கார்த்திக் தலையில் பயங்கர அடிபட்டு பைத்தியமாகிவிடுகிறான். அதன் பிறகு பைத்தியம் தெளிந்ததா, அவன் லட்சியக்கனவான போட்டோகிராபியில் ஜெயிச்சானாங்கிறது மீதிக்கதை. எப்போதும் போல இதிலும் நண்பர்கள் வட்டாரம் கலகலப்பு என்று படத்தின் முதல் பாதியை நகர்த்தியிருக்கிறார் செல்வராகவன். தனுஷ்-ரிச்சாவின் முதல்பாதி எபிஷோட்டின் மூலம் படம் எதையோ சொல்லப்போகிறது என்ற எதிர்பார்ப்பை ரசிகர்களுக்கு ஏற்படுத்திவிட்டு இறுதியில் இயக்குநர் விக்ரமன் படத்தின் க்ளைமாக்ஸ் போல படம் முடிவது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. அதிலும் தனுஷ், ரிச்சாவின் ஊடல் காதலாக மாறும் போது அதை தொடர்ந்து வரும் காட்சிகள் சில இடங்களில் சலிப்பை ஏற்படுத்துகிறது. ![]() இப்படி படத்தில் இருக்கும் குறைபாடுகள் அத்தனையையும் தூக்கிசுமந்து ரசிகர்களை சீட்டில் அமரவைக்கிறது என்றால் அது தனுஷின் நடிப்பு மட்டும்தான். ரிச்சா கங்கோபாத்யாய் படத்தின் ஹீரோயின் நடிப்பில் அசத்துகிறார். மிகப் பொறுமையாக மனஉறுதியுடன் உள்ள போதும், தனுஷை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் போதும் நன்றாக நடித்துள்ளார். மிக அழகாக உள்ளார். தனுஷ் திருமணத்தில் கலாட்டா செய்ததால் மற்றொரு நண்பன் முன் கண்ணீர் விட்டு அழுததும் அவன் வந்து ரிச்சாவை கட்டியணைத்து ஆறுதல் கூறும் போது தனுஷை விட்டு விட்டு தன்னிடம் வந்துவிடும் படி கூறும் போது, மறுத்து விட்டு தனுஷ் மீதான காதலை சொல்லும் போதும், அந்த பிரச்சினையை லாவகமாக தீர்க்கும் போதும் அசத்துகிறார். மற்ற நண்பர்களாக வருபவர்கள் அனைவரும் ஓகே. அதிலும் சுந்தராக வருபவர் மிக அருமையாக நடித்துள்ளார். தனுஷுடன் ரிச்சாவுக்கு திருமணமாகும் போது திட்டிக்கொண்டே வாழ்த்தும் போது தியேட்டர் சிரிப்பில் அதிர்கிறது. பாடல்கள் பார்க்க அருமையாக உள்ளது. படத்தில் பாராட்டப்பட வேண்டிய விஷயம் டயலாக். 'புடிச்ச வேலையை செய்யணும்.. இல்லன்னா செத்துரணும்..' இது மாதிரியான தத்துவம் சார்ந்த டயலாக் படம் முழுக்க விழுந்து தெறிக்குது. ரிச்சாவிடம் போன் பண்ணி தனுஷ் பேசும், 'எனக்கு பிடிச்சிருக்கு அதனால இந்த வேலையை செய்யுறேன். ![]() 'காதல் என் காதல்', 'ஓட ஓட' ரெண்டுமே சூப்பர் டூப்பர் ஹிட். 'சொன்னதும் மழை வந்துடுச்சா' என்ற செல்வராகவன் பாட்டின் மெல்லிய ஃபிலாசஃபி தமிழுக்கு புதுசு! 'என்னென்ன செய்தோம் இங்கு' ஹரீஷ் ராகவேந்திரா குரலில் உருக வைக்கிறது. குறிப்பா 'வெண்ணிலவே' பாட்டுக்கு குடிச்சுட்டு சுந்தர் - ரிச்சா - தனுஷ் ஆடி முடிக்கவும் வந்த பிண்ணனி இசை அற்புதம். ஒரு மெலோடிராமாவுக்கு இவ்வளவு அழகாய் கனகச்சிதமாய் ஒளிப்பதிவு செய்ததற்கு ராம்ஜிக்கு பாராட்டுக்கள். சில இடங்களில் காட்சியின் உணர்ச்சிக்கேற்ப லைட்டிங்கும் நம்மை அந்தந்த கேரக்டர்களின் உணர்வுகளைப் புரிய வைக்கிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் '7ஜி ரெயின்போ காலனி' படத்தையே நினைவுக்கு கொண்டு வருகின்றன. இடைவேளை வரை செல்வராகவன் படமாக இருக்கும் மயக்கம் என்ன இடைவேளைக்கு அப்புறம் 'விக்ரமன்' படமாக மாறியிருக்கிறது. காட்சிகளில் கவனம் செலுத்திய செல்வராகவன் காட்சிகளின் நீளத்திலும் கவனம் செலுத்தியிருந்தால் படம் ரொம்பவே ஸ்லோவாகி ரசிகர்களை நெளிய வைப்பதை தவிர்த்திருந்திருக்கலாம். இதுவரை செல்வராகவன் - தனுஷ் கூட்டணியில் உருவான படங்களை ரசிகர்கள் செல்வராகவனுக்காகத்தான் பார்க்க தியேட்டருக்கு வந்திருப்பார்கள். இந்தப் படத்தை பொருத்தவரையில் தனுஷுக்காக பார்க்கலாம். இது ஒரு மனநலம் பாதிப்பு பற்றி பட்டும் படாமல் சொல்லும் படம். படம் பார்க்கும் நமக்கு கொஞ்சம் பொறுமை இருந்தால் படத்தை பார்க்கலாம், படம் மிகவும் மெதுவாக செல்கிறது. சில காட்சிகள் பொறுமையை சோதிக்கின்றன. |
புதன், 14 டிசம்பர், 2011
மயக்கம் என்ன
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக