![]() |
தமிழ் திரையுலகில் தல அஜீத் நடித்து வெற்றி பெற்ற மங்காத்தா திரைப்படத்தை இயக்கிய வெங்கட் பிரபு, அடுத்த திரைப்படத்தை இயக்க தயாராகி வருகிறார்.![]() இந்த திரைப்படத்திற்காக திரைக்கதை அமைப்பதில் வெங்கட்பிரபு வேகமாக இயங்கி வருகிறார். இன்றைய காலகட்டத்துக்கு பொருத்தமாக, நான் இயக்கவுள்ள திரைப்படம் அமையும். இத்திரைப்படத்தில் வேடிக்கையான விடயங்கள் துள்ளி விளையாடும் என்றும் ஹாலிவுட்டில் கூட யோசிக்க முடியாத சில விடயங்களை இதில் எடுக்க திட்டமிட்டுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நாயகியாக நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச இருக்கிறோம். முக்கியமாக பிரேம்ஜி அமரன் நடிக்கவுள்ளார். மேலும் யுவன் ஷங்கர் ராஜா உட்பட தொழில்நுட்பக் கலைஞர்கள் இணைந்த படக்குழுவோடு களத்தில் இறங்கப் போகிறேன் என்று இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். |
வியாழன், 15 டிசம்பர், 2011
சூர்யாவை இயக்க தயாராகும் வெங்கட் பிரபு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக