வியாழன், 15 டிசம்பர், 2011

2018ம் ஆண்டு வரை நான் பிஸி: தமன்னா


2018ம் ஆண்டு வரை நான் ரொம்ப பிஸி என்று நடிகை தமன்னா கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: சினிமா ஒரு புதுவித உலகம். ஒவ்வொரு படத்துக்கும் புதுப்புது கதாநாயகிகள் தேவைப்படுகிறார்கள்.
இதனால் போட்டி என்பது ஒவ்வொருவருக்கும் மிரட்டலாகவே உள்ளது. சினிமாவில் மட்டுமல்ல, எங்கு சென்றாலும் இதுதான் நிலை. அதற்கு நம்மை தயார்படுத்திக் கொள்ளாவிட்டால் வெற்றி பெறுவது கடினம்.
சினிமாவை பொருத்தவரை நடிகைகளுக்கு அற்ப ஆயுள்தான் இருக்கிறது. கதாநாயகர்கள் தான் நீண்ட ஆயுள் படைத்தவர்கள். இந்த நிலை கொஞ்சம் மாறி இருக்கிறது.
“ஹேப்பி டேஸ்” என்ற தெலுங்கு படம் வெற்றி பெறாமல் இருந்திருந்தால் இந்நேரம் எங்காவது ஒரு விமானத்தில் பணிப்பெண்ணாக இருந்திருப்பேன்.
அந்த படம் வெற்றி பெற்று, நான் முழு நேர நடிகையானது கடவுள் அருள், என் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.
தற்போது 5 பெரிய படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். இது தவிர 20 படங்கள் என் கால்ஷீட்டுக்காக காத்துக் கிடக்கின்றன.
2018ம் ஆண்டு வரை தடையின்றி நடிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. எந்த நடிகையும் என்னிடம் சவாலுக்கு நிற்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக