![]() |
அப்பெரும் பாசத்தை உருக்கி ராகவேந்திரர் சிலை வடிக்க பக்கபலமாக செயல்பட்டுள்ளனர் சேலம் ரசிகர் மன்றத்தினர்.![]() ஆனால் சற்று மாறுப்பட்டு ரஜினி குணமடைந்து வந்தால் அவருக்கு ராகவேந்திரர் சிலை கொடுக்கிறேன் என்று வேண்டிக்கொண்டிருக்கிறார் கனகு. அவரின் வேண்டுதலுக்கு ஏற்ப ரஜினி குணமடைந்து சிங்கப்பூரில் இருந்து தமிழ் மண்ணில் காலடி வைத்ததும் சிலை வடிக்கும் வேலையை தொடங்கிவிட்டாராம். சிலை செய்ய ஒன்றரை லட்சம் வரை செலவானதால், சேலம் ரஜினி ரசிகர்கள் பலரும் இதற்கு உதவியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக கனகு தனது பெயரை 'ராகவா கனகு' என்று மாற்றிக் கொண்டாராம். ரஜினிக்கு பிடித்த ராகவேந்திரர் சிலையை அவருக்கு அளிப்பதால், அவருக்கும் சந்தோஷம் எங்களுக்கு திருப்தி என்றார் மூத்த ரஜினி ரசிகர் பழனிவேல். ஐம்பொன்னால் வடிவமைக்கப்பட்ட ராகவேந்திரர் சிலை விரைவில் ரஜினி வீட்டு பூஜையறையை அலங்கரிக்கும் என்கிறார்கள் சேலம் ரசிகர்கள். |
வியாழன், 15 டிசம்பர், 2011
ரஜினிக்கு ராகவேந்தர் சிலை கொடுத்த சேலம் ரசிகர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக