வியாழன், 15 டிசம்பர், 2011

மாதவன் போல மாப்பிள்ளை வேண்டும்: பிபாஷா பாசு


மாதவன் போல மாப்பிள்ளை கிடைத்தால் உடனே திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகை பிபாஷா பாசு கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: சின்ன வயதில் ஒல்லிக்குச்சி என்று தான் என்னை அழைப்பார்கள். நடிகையான புதிதில் கூட ஒல்லியாகத் தான் இருந்தேன்.
சாப்பாட்டு விடயத்தில் கட்டுப்பாடு கிடையாது. சரியான நேரத்தில் தூங்குவது இல்லை. உடற்பயிற்சி செய்ய மாட்டேன்.
இப்படி போய்க் கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று குண்டாக ஆரம்பித்து விட்டேன். மனரீதியாகவும் டென்ஷன் அதிகரித்தது. இதனால் மேலும் குண்டானேன்.
ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்து எடையை குறைக்க நினைத்தேன். அன்றுமுதல் தவறாமல் உடற்பயிற்சியில் கவனம் செலுத்தினேன். நேரம் கிடைக்காவிட்டால் வீட்டிலேயே எடை குறைப்பு பயிற்சி செய்வேன்.
எடையை குறைக்க வேண்டும் என்றால் இனிப்பையும் சாதத்தையும் குறைக்க சொல்கிறார்கள். நான் பெங்காலி பெண். ரசகுல்லாவையும் சாதத்தையும் தவிர்க்கவே முடியாது.
சமீபத்தில் தெலுங்கு கதாநாயகர் ராணாவை நான் மணக்கப்போவதாக கிசுகிசு வந்தது, அது உண்மையல்ல.
என் திருமணம் அனேகமாக அடுத்த ஆண்டுகூட இருக்காது. என் மனதுக்கு பிடித்தவரை எப்போது பார்க்கிறேனோ, அப்போதுதான் கல்யாணம்.
மாப்பிள்ளை தகுதியானவராக, இளமை துடிப்பு மிக்கவராக, சூப்பரானவராக, அதாவது நடிகர் மாதவன் போல இருக்க வேண்டும்.
மாதவனுடன் “ஷார்ட்டெம் ஷாதி” என்ற படத்தில் நடிக்கிறேன். அவரது நல்ல குணம் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. அவரை போன்ற ஆள் கிடைத்தால் உடனே திருமணம் செய்துகொள்வேன் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக