![]() |
இப்படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதன் படப்பிடிப்பு கேரள மாநிலம் சாலக்குடியில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் ஒரு மாதமாக நடந்தது.![]() உள்ளூர் பகுதி மக்கள் அங்கு யானைகள் கூட்டம் கூட்டமாய் வரும் என்றும், எப்போதும் வரும் என்பதை சொல்ல முடியாது என்றும் எச்சரித்தனர். ஆனால் லொக்கேஷன் அற்புதமாக இருந்ததால் படப்பிடிப்பை நிறுத்த மனமின்றி கார்த்தி, அனுஷ்கா நடித்த சில காட்சிகளை எடுத்தனர். படப்பிடிப்பை முடித்து விட்டு இருவரும் புறப்பட்டுச் சென்றதும் திடீரென அந்த பகுதியில் யானைக்கூட்டம் வந்தன. கார்த்தியும் அனுஷ்காவும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இதுபற்றி கார்த்தி கூறும் போது, சாலக்குடி காட்டில் யானைகள் அடிக்கடி வந்து போகும் இடத்தில் படப்பிடிப்பு நடந்தது. படப்படிப்பு முடிந்து நாங்கள் புறப்பட்டு போனதும் அங்கு யானை கூட்டம் வந்து இருப்பதாக தகவல் சொன்னார்கள். அதிர்ஷ்டவசமாக தப்பினோம் ஏற்கனவே 'ஆயிரத்தில் ஒருவன்' படப்பிடிப்புக்காக சாலக்குடி காட்டுக்கு போய் மிரண்டுள்ளேன் என தெரிவித்துள்ளார். |
புதன், 14 டிசம்பர், 2011
உயிர் தப்பிய கார்த்தி, அனுஷ்கா ஜோடி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக