தற்போது 5 தெலுங்கு படங்கள் கைவசம் உள்ளன. ராம்சரண் ஜோடியாக நடிக்கும் தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் சித்தூரில் நடந்து வருகிறது. நேற்று படப்பிடிப்பு இடைவேளையில் தமன்னாவும் ராம்சரண் தேஜாவும் திருப்பதி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர். வி.ஐ.பி. வழியில் சென்று சாமி தரிசனம் செய்தார்கள். தமன்னா ஜீன்ஸ், டீ சர்ட்டில் வந்து இருந்தார்.ஜீன்ஸ் அணிந்த பெண்களை கோவில் நிர்வாகத்தினர் சாமி கும்பிட அனுமதிப்பதில்லை. ஆனால் தமன்னா சுதந்திரமாக வந்து தரிசனம் செய்தது சக பெண் பக்தர்களை எரிச்சல்பட வைத்தது. அவர்கள் கோவில் நிர்வாகத்தினரை கண்டித்தனர். இதற்கிடையில் அவசரமாக தரிசனத்தை முடித்து விட்ட தமன்னா புறப்பட்டுச் சென்று விட்டார். ராம்சரண் வெளியே வந்தபோது ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கினார். அவரை பார்க்க ஒவ்வொரு வரும் முண்டியடித்ததால் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. இதனால் ராம்சரண் நிலை தடுமாறி கீழே தவறி விழுந்தார். அவரை பொலிசார் பாதுகாப்பாக அழைத்து சென்று காரில் ஏற்றினார். அ ப்போது நிருபர்களிடம் அவர் கூறும்போது, எனது திருமணம் ஜனவரியில் ஐதராபாத்தில் நடக்க உள்ளது. திருமண வரவேற்பை திருப்பதியில் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார். |
புதன், 14 டிசம்பர், 2011
சக பக்தர்களை எரிச்சலடைய வைத்த தமன்னா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
நேற்று படப்பிடிப்பு இடைவேளையில் தமன்னாவும் ராம்சரண் தேஜாவும் திருப்பதி கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர். வி.ஐ.பி. வழியில் சென்று சாமி தரிசனம் செய்தார்கள். தமன்னா ஜீன்ஸ், டீ சர்ட்டில் வந்து இருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக