பாலிவுட்டில் பிரபலமான நடிகர் அபிஷேக் பச்சன் ஏற்கனவே மணிரத்னம் இயக்கிய குரு, ராவணன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து தனுஷ் இயக்கும் திரைப்படத்திலும், மீண்டும் மணிரத்னம் இயக்கும் திரைப்படத்திலும் நடிக்க பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் விருப்பம் தெரிவித்துள்ளார்.மூன்று திரைப்படங்கள் மணிரத்னம் சாருடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தை என்னால் எப்போதும் மறக்க முடியாது. அவர் எனக்கு நல்ல நண்பராகவும், வழிகாட்டியாகவும் இருந்து சினிமாவில் தன்னம்பிக்கை உள்ள நடிகராக என்னை மாற்றியுள்ளார். நான் இப்போது பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறேன். நான் பேசும் தமிழ் அவ்வளவு நன்றாக இருக்காது. அதனால் அவர் இயக்கும் தமிழ் திரைப்படத்தில் நடிப்பது பற்றி நான் கொஞ்சம் கூட யோசிக்கவில்லை. எனவே மணிரத்னம் சார் விரும்பினால் அவருடைய இயக்கத்தில் நடிக்க எப்போதும் காத்திருக்கிறேன். என் இனிய நண்பரான நடிகர் தனுஷ் இயக்கும் பாலிவுட் திரைப்படத்தில் அவர் விரும்பினால் நான் நடிக்க தயாராக உள்ளேன். அவருடன் இணைந்து பணியாற்றுவதை பெருமையாக நினைக்கிறேன் என்று பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சான் கூறியிருப்பதாக பாலிவுட் வட்டாரம் தெரிவித்துள்ளது. |
திங்கள், 12 டிசம்பர், 2011
மணிரத்னம் மற்றும் தனுஷ் இயக்கங்களில் நடிக்க விரும்பும் அபிஷேக் பச்சன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இதையடுத்து தனுஷ் இயக்கும் திரைப்படத்திலும், மீண்டும் மணிரத்னம் இயக்கும் திரைப்படத்திலும் நடிக்க பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் விருப்பம் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக