கன்னடத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் ரமேஷ் அரவிந்த். தமிழிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 1995ம் ஆண்டு பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த “சதிலீலாவதி” படத்தில், கமலுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.பிறகு அதே சதிலீலாவதி படத்தை கன்னடத்தில் ராமா ஷாமா பாமா என்ற பெயரில் ரீ-மேக் செய்து இயக்குனராகவும் அறிமுகமானார் ரமேஷ். இதிலும் கமலே கதாநாயகராக நடித்தார். இந்தபடம் சூப்பர் ஹிட்டானது. தொடர்ந்து சத்தியவான் சாவித்ரி, ஆக்சிடண்ட், வெங்கடா இன் சங்கடா உட்பட பல படங்களை இயக்கி வெற்றி பட இயக்குநராக ஜொலித்தார். இப்போது நம் அண்ணா டான் என்ற படத்தை இயக்கி அதில் நடிக்கவும் செய்திருக்கிறார் ரமேஷ். இது அவருடைய 5வது படமாகும். விரைவில் இப்படம் வெளிவர இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தை தமிழிலும் ரீ-மேக் செய்து, அதில் கமலை நடிக்க வைக்கும் எண்ணத்தில் உள்ளாராம் ரமேஷ் அரவிந்த். சமீபத்தில் ஃபிக்கியின் ஊடகம் மற்றும் தொழில்துறை மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னை வந்த ரமேஷ் அரவிந்த், இதுதொடர்பாக கமலிடம் பேசியதாக கூறப்படுகிறது. விரைவில் இதுபற்றிய அறிவிப்புகள் வெளிவரலாம் என் எதிர்பார்க்கப்படுகின்றது. |
திங்கள், 12 டிசம்பர், 2011
ரமேஷ்வுடன் இணைவாரா கமலஹாசன்?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1995ம் ஆண்டு பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த “சதிலீலாவதி” படத்தில், கமலுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக