செவ்வாய், 13 டிசம்பர், 2011

விஸ்வரூபம் திரைப்படத்திற்காக கமல்ஹாசன் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்கிறார்


விஸ்வரூபம் திரைப்படத்திற்காக உலகநாயகன் கமல்ஹாசன் நாளை(14.12.2011) அமெரிக்காவிற்கு செல்ல உள்ளார்.
தமிழ் திரையுலகில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து இயக்கிவரும் விஸ்வரூபம் திரைப்படத்தின் மொத்த நிதி 120 கோடியை தாண்டும் என படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ்,தெலுங்கு,இந்தி என மூன்று மொழிகளில் எடுக்கப்பட்டு வரும் விஸ்வரூபம் திரைப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்கா, லண்டன், ஜோர்டான்,சென்னை ஆகிய இடங்களில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
இதற்கு முன்பு கமல்ஹாசனின் நடிப்பில் வெளியாகி, வெற்றி பெற்ற இந்தியன், தசாவதாரம்,மன்மதன் அம்பு ஆகிய திரைப்படங்களுக்கு செலவிடப்பட்டத்தை விட விஸ்வரூபத்தின் செலவு அதிகமானது என்று படக்குழு தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் படைவீரர், நாட்டியக்கலைஞர் ஆகிய கதாப்பாத்திரங்களில் கமல்ஹாசன் விஸ்வரூபம் திரைப்படத்தில் நடிக்கிறார். இதற்காக பிரபல நடன ஆசிரியர் பிர்ஜு மகராஜ்ஜிடம் முறையாக 'கதக்' நாட்டியத்தை கமல்ஹாசன் கற்றுக்கொண்டுள்ளார்.
சென்னை மற்றும் மும்பையிலும் கமல்ஹாசன்-ஆண்ட்ரியா இருவரின் நடிப்பில் பாடல்காட்சியை சமீபத்தில் படமாக்கியுள்ளார்கள்.
இதையடுத்து விஸ்வரூபம் திரைப்படத்தின் 60 சதவிகித படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் நாளை(14.12.2011) கமல்ஹாசன் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக