வெள்ளி, 16 டிசம்பர், 2011

ஜீன்ஸ் பேன்ட் அணிந்து கோயிலுக்குள் சென்றது ஏன்? தமன்னா விளக்கம்


ஜீன்ஸ் பேன்ட், டீ சர்ட் அணிந்து திருப்பதி கோயிலுக்குள் சென்றது ஏன்? என்பதற்கு நடிகை தமன்னா விளக்கம் அளித்துள்ளார்.
கோயில் நிர்வாகம் தனக்கு அபராதம் விதித்த பிறகும் இதனை பிரச்னையாக்குவது ஏன் என்றே புரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
நடிகை தமன்னா திருப்பதி கோவிலில் இரு தினங்களுக்கு முன் ஜீன்ஸ் பேன்ட், டீ சர்ட்டில் சென்று சாமி கும்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
ராம்சரனுடன் தெலுங்கு படமொன்றில் தமன்னா நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு திருப்பதி அருகே நடந்தது. அப்போது கோவிலுக்கு சென்று வழிபட்டார்.
திருப்பதி கோவிலுக்கு பெண்கள் சேலை அல்லது சல்வார் கமீஸ் அணிந்துதான் வர வேண்டும் என்று விதி உள்ளது. ஆனால் ஜீன்ஸ் பேன்டில் தரிசனம் செய்த தமன்னாவை கோவில் நிர்வாகத்தினர் எதிர்க்கவில்லை, பக்தர்கள் கண்டித்தனர்.
இதுபற்றி தமன்னா விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தது திட்டமிடாமல் அவசரமாக நடந்த ஒன்று. படப்பிடிப்பு குழுவினர் கோவிலுக்கு போகலாம் என்றதால் போனோம்.
நான் எப்போதுமே கோவில்களுக்கு சேலை அல்லது சல்வார் கமீஸ் அணிந்து தான் செல்வேன். ஆனால் இப்போது அவசரமாக போனதால் அப்படி செய்யவில்லை. அங்கு சாமி கும்பிட்ட போது கோவில் நிர்வாகத்தினர் யாரும் எதிர்க்கவில்லை.
என் தரிசனத்தை நான் முடித்து கிளம்பி விட்டேன். கோவில் நிர்வாகம் இதற்காக எனக்கு அபராதம் விதித்தது. அதன் பிறகும் இதை பிரச்சினையாக்குவது எனக்கு புரியவில்லை என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக