திங்கள், 12 டிசம்பர், 2011

தயாரிப்பாளராக மாறிய நந்தா


தமிழ் திரையுலகின் காதல் நாயகன் நடிகர் நந்தா சொந்தமாக ஒரு திரைப்படத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கிறார்.
தமிழ் திரையுலகில் வேலூர் மாவட்டம், வந்தான் வென்றான் போன்ற திரைப்படங்களில் நடித்த நடிகர் நந்தா தயாரிப்பாளராகியுள்ளார்.
தற்பொழுது பாண்டிச்சேரியில் படமாக்கப்படும் திருப்பங்கள் திரைப்படத்தில் நாயகனாக நடித்து வரும் நந்தா இந்த திரைப்படத்தை தயாரிக்கவும் செய்கிறார். திருப்பங்கள் திரைப்படத்தை சாரதா ராமநாதன் இயக்குகிறார்.
இது என்னுடைய நீண்ட நாள் கனவு என்று கூட சொல்லலாம். யாருடைய ஆலோசனையையும் கேட்காமல் திரைப்படத் தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளேன். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட கதை மற்றும் திரைக்கதையை படமாக்கி வருகிறோம்.
திருப்பங்கள் திரைப்படத்திற்கு கதாநாயகி கிடையாது. எதிர்வருகிற 2012 ஆம் வருடம் பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு இத்திரைப்படம் வெளியாகும் என்று நடிகரும், தயாரிப்பாளருமான நந்தா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக