| 
சனி, 31 டிசம்பர், 2011
சமரன் படப்பிடிப்பிற்காக தாய்லாந்து பயணமாகும் விஷால்,திரிஷா
பாகன் திரைப்படத்திற்காக உடல் எடையை குறைத்த ஸ்ரீகாந்த்
தமிழ் திரையுலகில் நாயகன் ஸ்ரீகாந்த் ஷங்கர் இயக்கத்தில் நண்பன் திரைப்படத்தில் நடித்துள்ளார். தற்போது முகமது அஸ்லம் இயக்கத்தில் பாகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  பாகன் திரைப்படத்தில் அவன் இவன் நாயகி ஜனனி அய்யர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பரோட்டா சூரி, அங்காடி தெரு பாண்டி, கோவை சரளா, ஜார்ஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.கிராமங்களிலிருந்து படித்த இளைஞர்கள் நகரங்களுக்கு வேலைக்காக செல்கின்ற இந்த காலத்தில் கிராமத்திலேயே முன்னேற பாடுபாடும் ஒர் இளைஞரின் கதையே பாகன் திரைப்படமாகும். நாயகன் ஸ்ரீகாந்த் பாகன் திரைப்படத்திற்காக தன் உடல் எடையில் 13 கிலோவை குறைத்துள்ளார். அறிமுக திரைப்படமான ரோஜாக்கூட்டத்தில் காணப்பட்ட தோற்றத்தில் இருப்பதாக படக்குழுவினர் கூறியுள்ளார்கள்.  | 
2011-ம் ஆண்டின் முன்னணி கதாநாயகிகள்
முன்னணி நடிகைகளாக இருந்த நயன்தாரா, திரிஷா, சினேகா, ஸ்ரேயா, தமன்னா போன்றவர்கள் பின்தங்கியுள்ளனர். நயன்தாரா திருமணத்துக்கு தயாராகி நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டார். நடிகை திரிஷா தெலுங்கில் கவனம் செலுத்தியுள்ளார். அனுஷ்கா, அமலாபால், ஹன்சிகா, அஞ்சலி, காஜல் அகர்வால் என பல புது நாயகிகள் இவ்வாண்டில் கலக்கினார்கள். அனுஷ்கா வானம், தெய்வத்திருமகள் படங்களில் வந்தார். ரஜினி, கமலுக்கு ஜோடியாகும் வாய்ப்பும் இவரை நெருங்குகிறது.முன்னணி கதாநாயகர்களும் அனுஷ்காவுடன் நடிக்க விரும்புகிறார்கள். சுராஜ் இயக்கத்தில் கார்த்தி ஜோடியாகவும், செல்வராகவன் இயக்கும் இரண்டாம் உலகம் படத்தில் ஆர்யா ஜோடியாகவும், தாண்டவம் படத்தில் விக்ரம் ஜோடியாகவும் தற்போது நடித்து வருகிறார். நடிகை ஹன்சிகா மாப்பிள்ளை படத்தில் தனுஷ் ஜோடியாக அறிமுகமானார். பின்னர் ஜெயம் ரவியுடன் எங்கேயும் காதல், விஜய்யுடன் வேலாயுதம் படங்களில் நடித்து முன்னணி நடிகை பட்டியலில் இருக்கிறார். சிம்புவுடன் வேட்டை மன்னன், உதயநிதி ஸ்டாலினுடன் “ஒரு கல் ஒரு கண்ணாடி” படங்கள் கைவசம் உள்ளன. நடிகை அமலாபாலுக்கு தெய்வத் திருமகள் படம் திருப்பு முனையாக அமைந்தது. மாதவன், ஆர்யாவுடன் வேட்டை, பழைய நடிகர் முரளியின் மகன் அதர்வாவுடன் முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். நடிகை டாப்ஸி ஆடுகளம், வந்தான் வென்றான், என இருபடங்களில் நடித்தார். நடிகை காஜல் அகர்வாலுக்கு இவ்வாண்டில் படங்கள் இல்லை. ஆனாலும் பெரிய நடிகர்களான ஆர்யா ஜோடியாக மாற்றான், விஜய் ஜோடியாக துப்பாக்கி படங்களில் நடித்து வருகிறார். நடிகை லட்சுமிராய், மெகா ஹிட்டான படங்களான காஞ்சனா, மங்காத்தா படங்களில் வந்தார். ஸ்ரேயாவுக்கு ரௌத்திரத்துக்கு பிறகு படங்கள் இல்லை. சிறுத்தை, வேங்கை படங்களுக்கு பிறகு தமன்னாவிடம் தமிழ் படங்கள் இல்லை. ஸ்ருதி, 7ஆம் அறிவு படம் மூலம் பேசப்பட்டார். தற்போது ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் ஜோடியாக '3' படத்தில் நடிக்கிறார். அஞ்சலி, கார்த்திகா, அனன்யா, ரிச்சா, ஓவியா, 'கோ'வில் வந்த கார்த்திகா போன்றோரும் 2011-ல் ரசிகர்களின் மனம் கவர்ந்தவர்களாக இருந்தனர்.  | 
எடிஷன் பெயரில் சினிமா கலைஞர்களுக்கு விருது
கடந்த நான்கு ஆண்டுகளாக திரைத்துறையினருக்காக எடிசன் பெயரில் சினிமா கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. 2011-ம் ஆண்டு ஜனவரி 1-ம் திகதி முதல் டிசம்பர் 23ம் திகதி வரை தமிழில் வெளிவந்த திரைப்படங்களில் உள்ள நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் என அனைத்து துறையினருக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளன.இவ்விருதை தேர்ந்தெடுக்க உலக தமிழர்கள் ஓன்லைன் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. www.edisonawards.in என்ற இணையத்தளத்தின் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் முன்னணி நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்களின் yahoo group, facebook மூலமும் ஒரு கோடி இமெயில் மூலமும், நியுஸ் லெட்டர் மூலமும் அனுப்பப்பட்டு ஓன்லைன் வாக்கு பெறப்பட்டு வருகிறது. இணையத்தளம் பயன்படுத்தாத பொதுமக்கள் வாக்களிக்கும் விதமாக 110 மையங்களில் வாக்கு சீட்டு முறைப்படி ஜனவரி 2-ம் திகதி முதல் ஜனவரி 30-ம் திகதி வரை வாக்களிக்கவும், கல்லூரி, ஷாப்பிங் மால், பீச் போன்ற இடங்களிலும் வாக்களிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த எடிசன் விருது வழங்கும் விழா 7 நாட்டு தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும். மேலும் மலேசியாவில் ஆஸ்ட்ரோ தொலைக்காட்சியின் ஏற்பாட்டின் கீழ், மலேசிய நடன கலைஞர்கள், பாடகர்கள், சிங்கப்பூர் வசந்தம் தொலைக்காட்சி நடன கலைஞர்கள், பாடகர்கள், காமெடி நடிகர்களை வைத்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்நிகழ்ச்சியில் வெளிநாட்டு அமைச்சர்கள் பத்திரிக்கையாளர்கள், பார்வையாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என்று எடிஷன் விருது குழு தெரிவித்துள்ளது.  | 
2011ம் ஆண்டில் கொலைவெறி தான் டாப்
யுட்யூபின் கோல்ட் விருது, டைம் இதழில் கவுரவம், பிரதமருடன் விருந்து சாப்பிடும் பெருமை என அடுத்தடுத்து கொலை வெறி டி பாடலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. சி.என்.என் தொலைக்காட்சியின் 2011-ன் டாப் பாடல் என்ற பாராட்டையும் இந்தப் பாடல் பெற்றுள்ளது.இந்தப் பெருமையைப் பெறும் முதல் தமிழ் பாடல் இது தான் என்பது கூடுதல் பெறுமை. இதற்கிடயே பிரதமரின் விருந்தில் நேற்று முன்தினம் பங்கேற்ற தனுஷ் இன்று சென்னை திரும்பியுள்ளார். இந்த ஆண்டு தனது புத்தாண்டு தினத்தை பெற்றோர் மற்றும் மாமனார் ரஜினியின் ஆசியுடன் தொடங்குவேன் என்று கூறிய தனுஷ் அன்றைய தினம் தன் மனைவி ஐஸ்வர்யா பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடப் போவதாகவும் அறிவித்துள்ளார்.  | 
தனுஷிற்கு பொற்காலமாக அமைந்த 2011
இன்றளவில் தமிழ் சினிமாவின் இளம் கதாநாயகன்களில் டாப் ஸ்டார் தனுஷ் தான், இதற்கு காரணம் "ஒய் திஸ் கொலவெறி" பாடல் மற்றும் ஆடுகளம் திரைப்படம். 2011ம் ஆண்டு தனுஷ் தனது திரையுலக வாழ்க்கையின் பொற்காலம் என்று கூறும் அளவுக்கு பாராட்டும், புகழும் அவருக்கு கிடைத்துள்ளது.இந்நிலையில் தனுஷ் விடைபெறவிருக்கும் 2011ம் ஆண்டில், தனக்கு பல்வேறு வெற்றிகளைத் தேடி தந்தமைக்காக தான் நன்றிக்கடன் பட்டிருக்கும் முதல் 5 நபர்களை குறிப்பிட்டு நன்றியுறையை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அவை பின்வருமாறு: தனுஷின் முதல் மரியாதை அவரது பெற்றோருக்குத் தான், அவர்களது அளப்பறிய அன்பு தான் மிகப்பெரிய உந்துதலாக இருந்ததாக கூறியுள்ளார். 2வது நன்றி ரசிக பெருமக்களுக்கும், தமிழ் திரையுலகினருக்கும். மூன்றாவது நன்றி இறைவனுக்கு உரித்தாகுக என கூறியிருக்கிறார். நான்காவது நன்றி பத்திரிகை, தொலைக்காட்சி, மீடியா மற்றும் வெளிநாட்டு ஊடகங்களுக்காம். இறுதி நன்றியை இயக்குனர்கள் செல்வராகவன் மற்றும் வெற்றிமாறனுக்கு தெரிவித்துள்ளார்.  | 
தமிழ் சினிமாவில் மீண்டும் நமீதா
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் நடிகை நமீதா. கோடம்பாக்கத்தில் நிறைய படங்களில் நடித்து வந்ததால் சென்னையிலேயே தனியாக வீடு வாங்கி குடியேறி, பல படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் கொலிவுட்டில் அவருக்கு திடீரென ஏற்பட்ட சரிவு காரணமாக சென்னை வீட்டை காலி செய்து விட்டு, தனது சொந்த ஊருக்கே திரும்பி சென்று விட்டார்.அவ்வப்போது தமிழ்நாட்டில் கடைகள் திறப்பு விழா, சினி விழா போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். கடந்த பல மாதங்களாக சொந்த ஊரில் தங்கி வந்த நமீதா இப்போது மீண்டும் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கே திரும்பிவிட்டார். சென்னையில் முன்பு நுங்கம்பாக்கத்தில் தங்கியிருந்த அவருடைய பழைய வீட்டுக்கே குடிவந்து விட்டார். மீண்டும் தமிழ் படங்களில் நடிக்கும் தீவிர முயற்சியிலும் இறங்கியுள்ளார்.  | 
தான் படித்த பள்ளியை சீரமைக்க நன்கொடை அளித்துள்ள ரஜினி
பெங்களூரில் உள்ள ஓர் பள்ளியில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 1954 முதல் 1959 வரை கல்வி கற்றார். இந்த பள்ளியில் தற்போது 300 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பழமையான இந்த பள்ளியின் கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.மேலும் இந்தப் பள்ளியின் 3,500 அடி நீள சுற்றுச்சுவர் எந்த நேரத்திலும் இடிந்து விழும் வாய்ப்பு உள்ளது.வகுப்பறையில் மின்சார வசதி கிடையாது, குடி தண்ணீர் குழாய் உடைந்துள்ளது, கழிப்பறையில் தண்ணீர் வசதி இல்லை.இதனால் மாணவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இதனிடையே இப்பள்ளியின் கட்டுமான பணிகளுக்கு நிதி உதவி அளிக்கவேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்துக்கு கர்நாடக மாநில சேவா சமிதி கோரிக்கை விடுத்தது. இதை தொடர்ந்து ரூ.25 லட்சம் நன்கொடை அளிக்க ரஜினிகாந்த் ஒப்புக்கொண்டுள்ளார். கட்டுமானப்பணிகள் தொடங்கியவுடன் இந்த தொகையை அனுப்பி வைப்பதாக ரஜினிகாந்த் உறுதி அளித்துள்ளார்.  | 
வேறு பரிமாணத்தில் நடித்திருக்கும் ஆர்யா, அனுஷ்கா
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இரண்டாம் படத்தின்  படப்பிடிப்பை ஹைதராபாத்தில் நடத்தி வருகிறார் செல்வராகவன். இந்நிலையில் இப்படம் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் இரண்டு கதைகள் இருக்கின்றன, நடிகர் ஆர்யா கதை தனியாகவும், நடிகை அனுஷ்கா கதை தனியாகவும் உள்ளன. எப்படி இரண்டு கதைகளும் ஒரே இடத்தில் இணைகின்றன என்பது தான் இப்படத்தின் சுவாரசியமான முடிவு.2012 ஜனவரி மாதம் இறுதியில் செல்வராகவனுக்கு குழந்தை பிறக்க இருக்கிறது. ஆகையால் ஜனவரி மாதம் இறுதி வரை இரண்டாம் உலகம் படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு இருக்கிறார் இயக்குனர் செல்வராகவன். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுடன் இணைந்திருப்பது குறித்து செல்வராகவன் கூறுகையில் வெவ்வேறு அணியுடன் பணியாற்றுவது தவறில்லை என்று நினைக்கிறேன். இரண்டாம் உலகம் படத்தின் இசை வேறு தளத்தில் இருக்குமாம் மேலும் ஆர்யாவும், அனுஷ்காவும் இப்படத்தில் வேறு பரிமாணத்தில் நடித்திருப்பார்கள் என்று கூறினார்.  | 
மண்டோதரியாக நடிக்க விருப்பமில்லை: நயன்தாரா
நயன்தாரா 'ஸ்ரீராம ராஜ்ஜியம்' என்ற தெலுங்கு படத்தில் சீதை வேடத்தில் நடித்தார். அதன் பிறகு புதுப்படங்களில் ஒப்பந்தமாகவில்லை. விரைவில் பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ள இருப்பதால் சினிமாவுக்கு முழுக்கு போட்டதாக கூறப்பட்டது.இந்த நிலையில் பிரபல இந்தி இயக்குனர் ராம்கோபால் வர்மா தனது படத்தில் நடிக்க நயன்தாராவை அணுகியதாக தகவல் வெளியாயின. அவர் ராவணன் கதையை கருவாக வைத்து அதே பெயரில் படம் எடுக்கவுள்ளார். இப்படத்தில் ராவணனின் மனைவி மண்டோதரி வேடத்தில் நடிக்க நயன்தாராவிடம் கேட்டதாக கூறப்பட்டது. அவர் நடிப்பாரா? மாட்டாரா? என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தில் நடிக்க நயன்தாரா மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து தெலுங்கு முன்னணி நடிகர் ஒருவர் கூறும்போது, நயன்தாராவுக்கு மண்டோதரியாக நடிக்க விருப்பம் இல்லை. ஏற்கனவே இயக்குனர்கள் பவன் கல்யாண், மகேஷ்பாபு படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்துள்ளது, ஆனால் நயன்தாரா மறுத்துவிட்டார் என்று கூறினார்.  | 
புத்தாண்டிற்கு அமலாபாலை தன் வீட்டிற்கு அழைத்துள்ள விஜய்
2012  புத்தாண்டை வேறு வெளியூரில் கொண்டாடவுள்ள திரையுலகினர் மத்தியில் தன் வீட்டிலேயே புத்தாண்டை கொண்டாடவுள்ளார் நடிகை அமலா பால். இதையடுத்து புத்தாண்டை தன் வீட்டில் கொண்டாட நடிகை அமலா பாலை தன் வீட்டிற்கு அழைத்திருக்கிறாராம் இயக்குனர் விஜய்.நடிகை அமலாபாலும் இயக்குனர் விஜய்யை தன் வீட்டிற்கு அழைத்துள்ளாராம். புது வருடம், புது தினத்தில் அமலாபாலின் மனதை கவர்ந்துள்ளார் இயக்குனர் விஜய். அமலாவின் வீட்டிற்கு வருகிறாரா..? அமலாபால் விஜய்யின் வீட்டிற்கு போகிறாரா..? என்பது அவர்கள் இருவருக்குதான் தெரியும் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  | 
வியாழன், 29 டிசம்பர், 2011
இருநாட்டு பிரதமர்களுடன் நடிகர் தனுஷ் விருந்தில் பங்கேற்பு
தமிழ் திரையுலகில் 3 திரைப்படத்திற்காக நடிகர் தனுஷ் பாடிய why this kolaveri di பாடலின் புகழ் நாளுக்கு நாள் பரவி வருகிறது. ஜப்பான் பிரதமர் யோஷிஹிகோ நோடா அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தில் நடிகர் தனுஷை சிறப்பு விருந்தினராக பிரதமர் மன்மோகன் சிங் அழைத்திருந்தார். இந்நிலையில் நடிகர் தனுஷ், நேற்று மாலை புதுடெல்லியில் உள்ள பிரதமர் மன்மோகன் சிங் வீட்டில் நடந்த விருந்தில் கலந்து கொண்டார். மேலும் ஜப்பானில் தனுஷின் மாமனார் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ரஜினிகாந்த் நடித்த முத்து திரைப்படம் ஜப்பானில் திரையிடப்பட்டு அமோக வெற்றி பெற்றது. தற்போது ஜப்பானில் மருமகன் தனுஷின் புகழும் பரவி வருகிறது. ஜப்பான் இரவு விடுதிகளில் why this kolaveri di பாடல் பாடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளன.  | 
நண்பன் திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள்
| திரைப்படத்தின் பணிகள் விரைவாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில சுவாரசியமான காட்சிகள் வெளியாகியுள்ளன. பொங்கலின் புதுவரவாக திரையிடப்பட இருக்கும் நண்பன் படத்தின் திரைக்கு பின்னால் உள்ள காட்சிகளை காணொளியில் காணலாம். ![]() ![]()  | 
எனக்கு பொருத்தமான ஜோடி நயன்தாரா, ஜெனிலியா தான்: தனுஷ்
கொலவெறி டி பாடல் ரசிகர்களிடையே சூப்பர் ஹிட் ஆனதோடு மட்டுமல்லாமல் பிரதமர் கொடுக்கும் விருந்தில் கலந்து கொள்கிற அளவுக்கு தனுஷை பிரபலமாக்கியுள்ளது. இதுபற்றி தனுஷ் கூறியதாவது, பிரதமர் விருந்தை நான் எதிர்பார்க்கவே இல்லை. படத்துக்கு தகுந்த பாடலாக இருக்கும் என்றும் மக்களுக்கு திருப்தி தரும் பாடலாக இருக்கும் என்றும் எதிர்பார்த்தோம்.ஆனால் இந்த அளவிற்கு பிரபலமானதற்கு கடவுளின் கருணையும், மக்கள் கொடுத்த வரவேற்பும் தான் காரணம். மற்ற இயக்குனர்களின் படங்களில் நடித்ததற்கும் எனது மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்ததற்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. இயக்குனர் வேலையை சிலசமயங்களில் வீட்டுக்கும் எடுத்து வருவார். அதனால் நாங்கள் சண்டை போட்டுக்கொண்டதும் உண்டு. இது எல்லா வீட்டிலும் நடக்கிற சண்டைதான். அவர் நிச்சயமாக தொடர்ந்து படங்களை இயக்குவார். ஆனால் அவர் இயக்கத்தில் நான் நடித்த முதல் படமும், இறுதி படமும் இதுதான். இனிமேல் அவரது படத்தில் நடிக்க மாட்டேன். மற்ற நிறுவனங்களுக்கு ஐஸ்வர்யா தொடர்ந்து படங்கள் இயக்குவார் என்று கூறியுள்ளார். பொருத்தமான ஜோடி குறித்த கேள்விக்கு தனுஷ் கூறியதாவது, ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் பொருத்தமானவர்கள்தான். உடல்வாகைப் பொருத்தவரை ஜெனிலியா எனக்கு பொருத்தமானவர், கதாபாத்திரத்திற்கு தகுந்தாற்போல் நடிப்பதில் நயன்தாராதான் பொருத்தமானவர் என்று கூறியுள்ளார்.  | 
காஜல் அகர்வால் நடித்த விளம்பரத்தை திரையிட தடை
தமிழ் திரையுலகில் நான் மகான் அல்ல, மோதி விளையாடு போன்ற திரைப்படங்களில் நடிகை காஜல் அகர்வால் நடித்துள்ளார். தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் மாற்றான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன்பு நடிகை காஜல் அகர்வால் பிரபல எண்ணெய் நிறுவன விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். ஆனால் அந்நிறுவனம் ஒப்பந்தம் முடிந்தும் கூட விளம்பரத்தை திரையிட்டுள்ளது.இதனால் காஜல் அகர்வால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நான் நடித்த விளம்பரத்தை தொடர்ந்து அந்நிறுவனம் பயன்படுத்தி வருகிறது. இதனால் மற்ற நிறுவனங்களுடன் செய்து கொண்ட விளம்பர ஒப்பந்தங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தான் நடித்த விளம்பரத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும். இதனால் எனக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்புக்கு ரூ.2.5 கோடி நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று தன்னுடைய மனுவில் குறிப்பிட்டிருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் காஜல் அகர்வால் நடித்த விளம்பரத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.  | 
பூக்கடை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் பசுபதி
பெரும் எதிர்பார்ப்போடு தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகர் பசுபதி. ஆனால் வெகு விரைவாக தமிழ் சினிமாவில் அடையாளம் தெரியாமல் போனார் அவர். நல்லவேளையாக அரவான் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பசுபதி. இந்த நேரத்தில்தான் இன்னொரு நல்ல தகவலும் வந்திருக்கிறது.கடந்த சில வாரங்களுக்கு முன் பசுபதியை தனது அலுவலகத்திற்கு அழைத்தாராம் இயக்குனர் மணிரத்னம். தற்போது இயக்கவிருக்கும் பூக்கடை படத்தில் முக்கிய கதாபாத்திரம் இருப்பதாகவும், அதில் நடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாராம். இந்தத் தகவலையடுத்து பலரும் பசுபதியை கைபேசியில் அழைத்து உண்மையா என கேட்கிறார்களாம், பசுபதியும் அதே பிரமிப்புடன் உண்மையா என திருப்பி கேட்கிறாராம். இநதத் தகவலை வெளியில் எவரிடமும் கூறக்கூடாது என்று இயக்குனர் மணிரத்னம் கேட்டுக்கொண்டதால் பசுபதி இந்த விஷயத்தை மறுக்கிறார் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  | 
நடிகை மம்தா மோகன்தாஸின் திருமணம் கோலாகலமாக நடந்தேறியது
| சிவப்பதிகாரம், குரு என் ஆளு போன்ற தமிழ் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர் மம்தா மோகன்தாஸ். இவர் 30-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்துள்ளார். தற்போது தடையறத் தாக்க என்ற தமிழ் படத்தில் நடிகர் அருண் விஜய்யுடன் ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. திருமணத்திற்கு மம்தாவின் நெருங்கிய உறவினர்கள், திரையுலக நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.   ![]()   ![]()  | 
உன்னதமானவன் திரைப்படத்தின் ஓடியோ வெளியீடு
தமிழ் திரையுலகில் மதுரையை வைத்து நிறைய திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வெற்றி பெற்றாலும் புதுமுகங்கள் நடித்துள்ள உன்னதமானவன் திரைப்படம் வெற்றியடையும் என்ற எதிர்ப்பார்ப்பு கொலிவுட்டில் எழுந்துள்ளது. உன்னதமானவன் திரைப்படத்தில் கதாநாயகனாக பிரபாவும், கதாநாயகியாக வர்ஷினியும் நடித்துள்ளார்கள். இவர்களுடன் புதுமுகம் ஐஸ்வர்யா, கஞ்சா கருப்பு, ஜெயப்பிரகாஷ், மனோபாலா, சிங்கம் புலி, பருத்தி வீரன் வெங்கடேஷ் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.உன்னதமானவன் திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய இடங்களில் நடந்துள்ளது. மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞனை கதாநாயகி காதலிக்கிறாள். அவளுடைய காதல் வெற்றி அடைந்ததா? நாயகன் எவ்வாறு மனநலம் பாதிக்கப்பட்டான் என்ற விடயங்களே படத்தின் திரைக்கதையாகும். இத்திரைப்படத்தின் கதாநாயகனான பிரபா மனநலம் பாதிக்கப்பட்ட கதாப்பாத்திரத்திற்காக 3 மாதங்கள் தாடி வளர்த்து தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மதுரை மாவட்டம் சின்னாலம் பட்டியின் நடந்த திருவிழா படப்பிடிப்பின் போது கிழிந்த சட்டையுடன் நடித்துக்கொண்டிருந்த கதாநாயகன் இளைப்பாற கோயிலில் அமர்ந்திருக்கிறார். அப்பொழுது மக்கள் உண்மையான பைத்தியக்காரன் என்று நினைத்து நாயகனுக்கு காசு போட்டுள்ளனர். இந்த விடயத்தை நாயகன் இயக்குனரிடம் சொல்ல, இயக்குனர் இது கதாப்பாத்திரத்திற்கு கிடைத்த வெற்றி என்று பாராட்டியுள்ளார். ![]() ![]() ![]() ![]()  | 
சினிமா நட்சத்திரங்களின் புத்தாண்டு கொண்டாட்டங்கள்
நடிகை த்ரிஷா புத்தாண்டையொட்டி தோழிகளுடன் சிட்னி செல்கிறார், அவரது காதலரும் தனியே சென்று, புத்தாண்டு அன்று த்ரிஷாவுடன் பார்ட்டியில் பங்கேற்க உள்ளாராம். நடிகை ரீமா சென் தனது காதலன் சிவ்கிரண் சிங்குடன் கோவாவில் புத்தாண்டை கொண்டாடவுள்ளார். நடிகை லட்சுமிராய் லண்டனில் நடக்கும் கலைவிழாவில் தனது ரகசிய காதலனுடன் புத்தாண்டு கொண்டாட திட்டமிட்டுள்ளாராம்.நடிகை ஜெனிலியா தனது காதலர் ரிதேஷ் தேஷ்முக்குடன் மும்பையில் பார்ட்டி வைத்து பாலிவுட் நட்சத்திரங்களை அழைக்க முடிவு செய்துள்ளார். இந்த காதல் ஜோடிகளுக்கு இடையே சில கொலிவுட் நட்சத்திரங்கள் தனியாகவும், சிலர் தங்கள் மனைவியுடனும் புத்தாண்டு கொண்டாட திட்டம் போட்டுள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸில் படப்பிடிப்பிற்கு சென்றுள்ள நடிகர் சிம்பு அங்கேயே புத்தாண்டை கழிக்க உள்ளார். இயக்குனர் செல்வராகவன் தான் இயக்கும் இரண்டாம் உலகம் படத்தின் படப்பிடிப்பிற்காக ஐதராபாத்தில் பிஸியாக இருக்கிறார். இதனால் வரும் 31ம் திகதி அவரது மனைவி கீதாஞ்சலி புத்தாண்டை தன் கணவருடன் கொண்டாட ஐதராபாத் செல்கிறார். மும்பையில் நடக்கும் துப்பாக்கி படத்தின் படப்பிடிப்பில் நடித்து வரும் நடிகர் விஜய் புத்தாண்டையொட்டி சென்னை திரும்புகிறார். மனைவி சங்கீதா மற்றும் குழந்தைகளுடன் வீட்டிலேயே புத்தாண்டு கொண்டாடுகிறார். நடிகர் அஜீத் தனது மனைவி ஷாலினி மற்றும் குழந்தையுடன் புத்தாண்டை கொண்டாட சுவிட்சர்லாந்துக்கு ஏற்கனவே சென்றுவிட்டார். நடிகை குஷ்பு தனது கணவர் சுந்தர்.சி. மற்றும் குழந்தைகளுடன் கோலாலம்பூரில் புத்தாண்டைக் கொண்டாடவுள்ளார். நடிகை ஸ்ருதிஹாசன் தனது அம்மா சரிகா மற்றும் தங்கை அக்ஷராவுடன் கோவாவில் புத்தாண்டு கொண்டாடவுள்ளார். அதே போல் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியுடன் கோவாவில் புத்தாண்டை கொண்டாடவுள்ளார்.  | 
தினமும் 20 சிகரெட் பிடிக்கிறேன்: மது ஷாலினி
அவன் இவன் படத்தையடுத்து ராம் கோபால் வர்மா இயக்கும் ‘டிபார்ட்மென்ட்' இந்தி படத்தில் ரவுடி கூட்டத்தின் தலைவியாக நடிக்கிறார் மது ஷாலினி. இதற்காக தினமும் 20 சிகரெட் புகைக்கிறார். இது பற்றி அவர் கூறுகையில் சிகரெட் வாடையே எனக்கு பிடிக்காது.அதை பிடிப்பவர்களையும் அடியோடு வெறுக்கிறேன். ஆனால் இப்படத்தில் சிகரெட் பிடித்து நடிக்கிறேன். நடிப்பு எனது தொழில் என்பதால் இதற்கு சம்மதித்தேன். எப்போது படம் முடியும் என்று காத்துக் கொண்டிருக்கிறேன். படப்பிடிப்பு முடிந்ததும் சிகரெட் பிடிப்பதை நிறுத்திவிடுவேன். வேடத்துக்காக சிகரெட் பிடிக்க கற்றுக்கொண்டதே கஷ்டமான அனுபவம். காட்சியில் நடிக்கும்போது ஒவ்வொரு நாளும் குறைந்தது 20 சிகரெட்டாவது பிடிக்கிறேன். பலமுறை மறுத்த பிறகும் என்னையும் இயக்குனர் ராம்கோபால் வர்மாவையும் இணைத்து நிறைய கிசுகிசு வருகிறது. அதெல்லாம் வெறும் வதந்திதான். தொழில் ரீதியாகத்தான் நாங்கள் பழகுகிறோம். இவ்வாறு மது ஷாலினி கூறினார்.  | 
விஜய் இடத்தை கைப்பற்றிய சூர்யா
சென்னை ஃபாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் சென்னையில் தசாவதாரம், எந்திரன் ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே ஒன்பது கோடியைத் தாண்டி வசூல் செய்திருந்தது. இந்த நிலையை மாற்றிக்காட்டி விட்டது 7-ஆம் அறிவு. முதல் நான்கு வார முடிவில் சென்னையில் மட்டும் 10.5 கோடி வசூல் செய்துள்ளது.இதன்மூலம் சென்னையில் ரஜினி, கமல், விஜய் என்றிருந்த ராஜாங்கம் தற்போது ரஜினி, கமல், சூர்யா என்று மாறி விஜய் நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார். மங்காத்தா திரைப்படம் நல்ல வெற்றி படம் தான், ஆனால் முதல் நான்கு வார முடிவில் மங்காத்தா சென்னையில் வசூல் செய்தது வெறும் 3.8 கோடி மட்டும் தானாம். நடிகர் விஜய்யின் வேலாயுதம் திரைப்படம் முதல் நான்கு வார முடிவில் சென்னையில் 4.1 கோடியை மட்டுமே ஈட்டியுள்ளது. மொத்தத்தில் நடிகர் சூர்யா தற்போது நடித்து வரும் மாற்றான் படத்தின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட உரிமையை இப்போதே 7 கோடிக்கு துணிச்சலாக விலை பேசியுள்ளனர்.  | 
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
முதன் முறையாக விஷாலுடன் நாயகி திரிஷா இணைகிறார். முக்கியமான கதாப்பாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார்.
பாகன் திரைப்படத்தில் அவன் இவன் நாயகி ஜனனி அய்யர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பரோட்டா சூரி, அங்காடி தெரு பாண்டி, கோவை சரளா, ஜார்ஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.
அனுஷ்கா, அமலாபால், ஹன்சிகா, அஞ்சலி, காஜல் அகர்வால் என பல புது நாயகிகள் இவ்வாண்டில் கலக்கினார்கள். அனுஷ்கா வானம், தெய்வத்திருமகள் படங்களில் வந்தார். ரஜினி, கமலுக்கு ஜோடியாகும் வாய்ப்பும் இவரை நெருங்குகிறது.
2011-ம் ஆண்டு ஜனவரி 1-ம் திகதி முதல் டிசம்பர் 23ம் திகதி வரை தமிழில் வெளிவந்த திரைப்படங்களில் உள்ள நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் என அனைத்து துறையினருக்கும் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
சி.என்.என் தொலைக்காட்சியின் 2011-ன் டாப் பாடல் என்ற பாராட்டையும் இந்தப் பாடல் பெற்றுள்ளது.
2011ம் ஆண்டு தனுஷ் தனது திரையுலக வாழ்க்கையின் பொற்காலம் என்று கூறும் அளவுக்கு பாராட்டும், புகழும் அவருக்கு கிடைத்துள்ளது.
இந்நிலையில் கொலிவுட்டில் அவருக்கு திடீரென ஏற்பட்ட சரிவு காரணமாக சென்னை வீட்டை காலி செய்து விட்டு, தனது சொந்த ஊருக்கே திரும்பி சென்று விட்டார்.
பழமையான இந்த பள்ளியின் கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.மேலும் இந்தப் பள்ளியின் 3,500 அடி நீள சுற்றுச்சுவர் எந்த நேரத்திலும் இடிந்து விழும் வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் இப்படம் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் இரண்டு கதைகள் இருக்கின்றன, நடிகர் ஆர்யா கதை தனியாகவும், நடிகை அனுஷ்கா கதை தனியாகவும் உள்ளன. எப்படி இரண்டு கதைகளும் ஒரே இடத்தில் இணைகின்றன என்பது தான் இப்படத்தின் சுவாரசியமான முடிவு.
விரைவில் பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ள இருப்பதால் சினிமாவுக்கு முழுக்கு போட்டதாக கூறப்பட்டது.
இதையடுத்து புத்தாண்டை தன் வீட்டில் கொண்டாட நடிகை அமலா பாலை தன் வீட்டிற்கு அழைத்திருக்கிறாராம் இயக்குனர் விஜய்.
ஜப்பான் பிரதமர் யோஷிஹிகோ நோடா அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

இதற்கு முன்பு நடிகை காஜல் அகர்வால் பிரபல எண்ணெய் நிறுவன விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். ஆனால் அந்நிறுவனம் ஒப்பந்தம் முடிந்தும் கூட விளம்பரத்தை திரையிட்டுள்ளது.
நல்லவேளையாக அரவான் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பசுபதி. இந்த நேரத்தில்தான் இன்னொரு நல்ல தகவலும் வந்திருக்கிறது.
 
 
உன்னதமானவன் திரைப்படத்தில் கதாநாயகனாக பிரபாவும், கதாநாயகியாக வர்ஷினியும் நடித்துள்ளார்கள். இவர்களுடன் புதுமுகம் ஐஸ்வர்யா, கஞ்சா கருப்பு, ஜெயப்பிரகாஷ், மனோபாலா, சிங்கம் புலி, பருத்தி வீரன் வெங்கடேஷ் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.



நடிகை லட்சுமிராய் லண்டனில் நடக்கும் கலைவிழாவில் தனது ரகசிய காதலனுடன் புத்தாண்டு கொண்டாட திட்டமிட்டுள்ளாராம்.
இதற்காக தினமும் 20 சிகரெட் புகைக்கிறார். இது பற்றி அவர் கூறுகையில் சிகரெட் வாடையே எனக்கு பிடிக்காது.
இந்த நிலையை மாற்றிக்காட்டி விட்டது 7-ஆம் அறிவு. முதல் நான்கு வார முடிவில் சென்னையில் மட்டும் 10.5 கோடி வசூல் செய்துள்ளது.