சனி, 4 பிப்ரவரி, 2012

பிரபுதேவா தந்தை மீது பெண் நடன இயக்குனர் புகார்


தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக தாரா என்ற பெண் நடன இயக்குனர் பிரபுதேவா தந்தை சுந்தரம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
கொலிவுட்டில் போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல் போன்ற திரைப்படங்களை பிரபு தேவா இயக்கியுள்ளார்.
இவரது தந்தை சுந்தரத்தின் மீது பெண் நடன இயக்குனர் தாரா என்பவர் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தன்னுடைய மனுவில் கூறியிருப்பதாவது, சுந்தரமும் நானும் 38 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
பின்னர் தன்னுடைய ஊருக்கு சென்று வருவதாக புறப்பட்டு சென்ற சுந்தரம் நீண்ட திகதிகளுக்கு பின்பு வந்தார். வேறொரு திருமணம் செய்து கொண்டதாக, என்னிடம் தெரிவித்தார்.
இந்த விடயத்தை மன்னித்து சில காலம் அவருடன் குடும்பம் நடத்தினேன். இருப்பினும் அவர் என்னை ஏமாற்றி விட்டு சென்று விட்டார். இப்பொழுது நானும் என்னுடைய மகனும் பொருளாதார ரீதியாக கஷ்டப்படுகிறோம்.
எனவே எங்களுக்கு ஜீவனாம்சம் தர வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக