சனி, 4 பிப்ரவரி, 2012

23ம் திகதி வேலை நிறுத்தம் செய்யவுள்ள திரைப்பட சங்கங்கள்


வருகிற் 23ம் திகதி தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற கோரி திரைப்பட சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
திரைப்படங்களுக்கு மத்திய அரசு சேவை வரி விதிப்பதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
அனைத்து மாநிலங்களிலும் திரைப்பட சங்கங்கள் இந்த சேவை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன, நேரில் மனுக்களும் அளிக்கப்பட்டன.
அடுத்த கட்டமாக ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். வருகிற 23ம் திகதி இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடக்கிறது.
இந்திய சினிமா சங்கங்கள் இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.
ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழ் திரையுலகமும் பங்கேற்கும் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக