![]() |
கொலிவுட்டில் சூர்யாவுடன் அயன், விஜய்யுடன் சுறா, கார்த்தியுடன் பையா, சிறுத்தை, தனுசுடன் வேங்கை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நாயகியாக தமன்னா நடித்துள்ளார். இதுகுறித்து தயாரிப்பாளர் ஒருவர் கூறும்போது, தமன்னா ராச்சா, எந்துகற்தே, பிரேமந்தா ரீபெல் ஆகிய மூன்று தெலுங்கு படங்களில் நடிக்கிறார். இப்படங்களில் நடித்து விட்டுத்தான் வேறு படங்களில் நடிப்பேன் என்று உறுதிமொழி அளித்து இருந்தார். ஆனால் இவற்றை முடிப்பதற்கு முன்பே மகேஷ்பாபு ஜோடியாக நடிக்க புதுப்படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இது ஒப்பந்தத்தை மீறும் செயலாகும். தமன்னாவின் திகதிகள் குளறுபடியால் ராச்சா படம் முடியாமல் ஒரு மாதத்துக்கு மேல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மற்ற தயாரிப்பாளர்களும் தங்கள் படத்தை முடிக்கும் படி வற்புறுத்துகின்றனர். இதையெல்லாம் பொருட்படுத்தாமல் தமன்னா, மகேஷ் பாபு படத்துக்கு ஒப்பந்தமாகியுள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளார். |
சனி, 4 பிப்ரவரி, 2012
தமன்னா மீது தயாரிப்பாளர்கள் புகார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக