சனி, 4 பிப்ரவரி, 2012

முக்தா சீனிவாசனுடன் இணையும் வெங்கட்பிரபு


கொலிவுட்டில் முக்தா சீனிவாசன் தயாரிக்கும் புதிய படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார்.
கொலிவுட்டில் மங்காத்தா வெற்றிக்குப் பிறகு இயக்குனர் வெங்கட் பிரபுவின் மதிப்பு உயர்ந்துள்ளது.
திரையுலகின் முக்கிய தயாரிப்பாளர்களான முக்தா சீனிவாசன் மற்றும் அவரது தம்பி வி.ராமசாமியின் மகன் முக்தா கோவிந்த் இருவரும் இணைந்து முக்தா எண்டர்டைன்ட்மென்ட் என்ற பட நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்கள்.
வருடத்திற்கு மூன்று படங்களை தயாரிக்க வேண்டும் என்று இவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் புதிய படத்தை முக்தா எண்டர்டைன்ட்மென்ட் தயாரிக்க உள்ளது.
வெங்கட் பிரபுவின் இந்த புதிய திரைப்படத்தில் நாயகன் சூர்யா நடிக்க உள்ளார். மாற்றான் திரைப்படத்திற்கு பின்பு சூர்யா, வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் முக்தா சீனிவாசன், இன்றைய இளைஞர்கள் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக