![]() |
நார்வேயில் உள்ள ஆஸ்லோ மற்றும் லோஹன்ஸ்கா நகரங்களில் இவ்விழா நடக்கவுள்ளது.![]() அழகர்சாமியின் குதிரை, வெங்காயம், வாகை சூடவா, கோ, ஆரண்ய காண்டம், தீராநதி, எங்கேயும் எப்போதும், போராளி, மயக்கம் என்ன, பாலை, உச்சிதனை முகர்ந்தால், வர்ணம், மகான் கணக்கு, ஸ்டார் 67, நர்த்தகி ஆகிய 15 படங்கள் தெரிவு செய்யப்பட்டவுள்ளன. பாலம் கல்யாண சுந்தரம் பற்றிய ஆவணப்படம், அன்னக்கிளி செல்வராஜ் இயக்கத்தில் இளையராஜா இசை அமைத்த பச்சைக்குடை உள்ளிட்ட குறும்படங்களும் தெரிவாகிவுள்ளன. மேலும் தகுதியான குறும்படங்கள் தேர்வு வருகிற 15-ந் திகதி வரை நடக்கிறது. நார்வே படவிழாவில் திரையிடப்படும் திரைப்படங்களுக்கு 25 பிரிவுகளில் தமிழர் விருதுகள் வழங்கப்படுகின்றன. நார்வே படவிழாவுக்கு தெரிவு செய்யப்பட்ட படங்களின் பட்டியலை இயக்குனர் பாலுமகேந்திரா வெளியிட்டார். நிகழ்ச்சியில் திரைப்பட விழாக்குழு இயக்குனர் வசீகரன், சிவலிங்கம், உதயன் ஆகியோர் பங்கேற்றனர். |
சனி, 4 பிப்ரவரி, 2012
நார்வே திரைப்பட விழாவில் தெரிவு செய்யப்பட்டுள்ள 15 திரைப்படங்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக