பிரம்மாண்டமாக நடந்துள்ள ஜெனிலியா, ரித்தேஷ் திருமணம்
ஹிந்தி திரையுலகில் பிரபலமாக பேசப்பட்ட ஜெனிலியா ரித்தேஷ் திருமணம் நேற்று ஓர் நட்சத்திர விடுதியில் பிரம்மாண்டமாக நடந்தது.
தமிழில் பாய்ஸ், சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம், வேலாயுதம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை ஜெனிலியா. ஹிந்தியிலும் இவர் பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கும் மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகனும், பாலிவுட் நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக்கிற்கும் காதல் மலர்ந்தது.
ஆரம்பத்தில் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த இருவீட்டாரும், பின்னர் இவர்களது காதலுக்கு பச்சைக்கொடி காட்டினர்.
இதனையடுத்து திருமண ஏற்பாடுகள் வெகு சிறப்பாக நடந்து வந்தது.
சில தினங்களுக்கு முன் வட இந்திய பாணியில் சங்கீத் விழா, மெஹந்தி போன்ற வைபவங்கள் மும்பையில் உள்ள ஒர் நட்சத்திர உணவு விடுதியில் நடந்து முடிந்தது.
இதனையடுத்து நேற்று(3.2.2012) ஜெனிலியா ரித்தேஷ் திருமணம் ஓர் நட்சத்திர விடுதியில் வெகு சிறப்பாக நடந்தேரியது.
திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் திரலாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக