வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

திருமண முதல் நாள் விழாவில் நடனமாடிய ஜெனிலியா


நேற்று(2.2.2012) நடந்த தனது திருமண முதல் நாள் விழாவில் குத்தாட்டம் ஆடியுள்ள நடிகை ஜெனிலியா.
தமிழில் பாய்ஸ், சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம்,  வேலாயுதம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை ஜெனிலியா.
ஹிந்தியிலும் இவர் பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கும் மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகனும், பாலிவுட் நடிகருமான ரித்தேஷ் தேஷ்முக்கிற்கும் காதல் மலர்ந்தது.
ஆரம்பத்தில் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த இருவீட்டாரும், பின்னர் இவர்களது காதலுக்கு பச்சைக்கொடி காட்டினர்.
இதனையடுத்து திருமண ஏற்பாடுகள் வெகு சிறப்பாக நடந்து வந்தது.
இந்நிலையில் இவர்களின் திருமண முதல் நாளான நேற்று ஜெனிலியா குத்தாட்டம் ஆடி விழாவை குதூகலப்படுத்தினார்.
சில தினங்களுக்கு முன் வட இந்திய பாணியில் சங்கீத் விழா எனும் வைபவம் மும்பையில் உள்ள ஒர் நட்சத்திர உணவு விடுதியில் நடந்தது.
இதில் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் பங்கேற்றவர்கள் ஆட்டம், பாட்டம் என்று கொண்டாடி மகிழ்ந்தனர்.

 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக