வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

சொந்த ஆல்பம் தயாரிக்கும் தனுஷ்


கொலைவெறி பாடல் வெற்றியடைந்ததையொட்டி தன் சொந்த ஆல்பம் தயாரிக்கும் பணியில் நடிகர் தனுஷ் ஈடுபட்டுள்ளார்.
3 திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள கொலைவெறி பாடல் உலகம் முழுக்க பிரபலமடைந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தன் சொந்த ஆல்பம் தயாரிக்கும் பணியில் நடிகர் தனுஷ் ஈடுபட்டுள்ளார்.
கொலைவெறி பாடல் தனுஷின் சொந்த வரிகளை வைத்து அவரே பாடினார். அதேபோல் இந்த ஆல்பத்திலும் தனுஷே எழுதி, பாடவுள்ளார்.
இந்த ஆல்பத்தில் இடம்பெறவுள்ள காட்சிகளை பிரபல புகைப்படப்பிடிப்பாளரான வேல்ராஜ் பதிவு செய்யவுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக