![]() |
பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் மற்றும் நடிகை கரினா கபூர் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர்.![]() இதையடுத்து விரைவில் திருமணம் செய்து கொள்ளும்படி இரு வீட்டு பெற்றோரும் வற்புறுத்தி வந்தார்கள். இந்நிலையில் சயீப் அலிகான்-கரினா கபூர் திருமணம் எதிர்வருகிற மார்ச் 23ம் திகதி நடைபெறவுள்ளது. இதற்கு முன்பாக வருகிற 10ம் திகதி திருமணத்திற்கான நிச்சியதார்த்தம் நடைபெறுகிறது. சயீப் அலிகான் ஏற்கனவே திருமணம் ஆனவர். முதல் மனைவியான நடிகை அமிர்தாசிங்கை 1991ல் மணந்தார். பின்பு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2004ல் விவாகரத்து செய்து கொண்டனர். தற்போது கரீனாகபூரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள சயீப் அலிகான் சம்மதம் தெரிவித்துள்ளார். |
சனி, 4 பிப்ரவரி, 2012
மார்ச் 23ம் திகதி நடைபெறவுள்ள சயிப் அலிகான், கரினா கபூர் திருமணம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக