![]() |
கொலிவுட்டில் சேவற்கொடி திரைப்படத்தில் பிரபல நீச்சல் வீரர் அருண் பாலாஜி நாயகனாக அறிமுகமாகிறார்.![]() வில்லனாக பவன், பிதாமகன் மகாதேவன், ஸ்ரீ ரஞ்சனி மற்றும் பலர் நடித்துள்ளார்கள். சேவற்கொடி திரைப்படத்திற்கு எங்கேயும் எப்போதும் இசையமைப்பாளர் சத்யா இசையமைத்துள்ளார். இயக்குனர் கே.வி.ஆனந்தின் உதவியாளர் செல்லத்துரை ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். சண்டை பயிற்சி-திலீப் சுப்பராயன், நடனம்-தீனா, சிவாஜி, பாபி, திரைப்படத்தொகுப்பு-பழனிவேல், கலை-குருராஜ் மற்றும் பல தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றியுள்ளார்கள். இயக்குனர்கள் சீமான், ராதா மோகன் ஆகியோரிடம் இணை இயக்குனராக பணியாற்றிய இரா.சுப்பிரமணியன் சேவற்கொடி படத்தை இயக்கியுள்ளார். தவறாக புரிதலில் இருவருக்கும் இடையே உண்டாகும் மோதலை படமாக்கியுள்ளோம். இருவரிடையே மோதல்கள் ஏன் ஏற்படுகிறது என்பது தான் படத்தின் இறுதிக்காட்சி ஆகும். தமிழ்நாட்டின் திருச்செந்தூர் மற்றும் கடற்கரையோர கிராமங்களின் பின்னணியில் கதைக்களம் அமைந்துள்ளது. படப்பிடிப்புகளை நாலுமாவடி, ஆறுமுகநேரி, மணப்பாடு, உடன்குடி,பெரிதாழை ஆகிய பகுதியில் படமாக்கியுள்ளோம். திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்ச்சியில் நாயகன், நாயகியை தேடும் காட்சியை திரளான மக்களோடு படமாக்கியுள்ளோம். கன்னியாகுமரி சாலையில் நாயகன் அருண் பாலாஜியும் வில்லன் பவனும் மோதிக்கொள்ளும் சண்டைக்காட்சியை கஷ்டப்பட்டு படமாக்கியுள்ளோம். யதார்த்தமான, பொழுதுபோக்கான படமாக சேவற்கொடி இருக்கும் என்று இயக்குனர் இரா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். |
வெள்ளி, 3 பிப்ரவரி, 2012
திருச்செந்தூர் கதைக்களத்தில் சேவற்கொடி படம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக