வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

மூணாரின் இதமான குளிரை அனுபவித்த பிந்து மாதவி


கேரளாவின் மூணாரில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட நாயகி பிந்து மாதவி, மூணாரின் இயற்கை அழகைப்பற்றி வர்ணித்துள்ளார்.
கொலிவுட்டில் கழுகு படத்தில் நாயகன் கிருஷ்ணா உடன் நாயகி பிந்து மாதவி இணைந்து நடித்துள்ளார்.
கழுகு படப்பிடிப்பு இந்தியாவின் பிரதான சுற்றுலாத்தளமான கேரளா மாநிலம் மூணாரில் நடந்துள்ளது.
மூணாரில் நடந்த படப்பிடிப்பில் நாயகி பிந்து மாதவி கலந்து கொண்டு மூணாரின் இயற்கை அழகைப்பற்றி வர்ணித்துள்ளார்.
பிந்து மாதவி கூறியதாவது, மூணாரின் குளிர்ச்சி என்னை பிடித்து இதமாக உலுக்கி விட்டது.
மூணாரின் சீதோஷ்ண நிலை எனக்கு ரொம்ப பிடித்தது. காலை நேரத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்டால் இரவில் ஒரே சோர்வாக இருக்கும்.
ஆனால் மூணாரில் எந்த நேரத்தில் படப்பிடிப்பு நடந்தாலும் அத்தகைய சோர்வு என்னை அடைய வில்லை. மிகுந்த உற்சாகத்துடன் கழுகு படப்பிடிப்பில் கலந்து கொண்டேன்.
தன்னுடைய படங்களை இயற்கை கொஞ்சும் இடங்களில் எடுத்தால் நன்றாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக