![]() |
ரஜினி நடிப்பில் அடுத்து தயாராக இருக்கும் திரைப்படம் கோச்சடையான்.![]() தியாகராஜன் குமாராஜா இயக்கிய ஆரண்ய காண்டம் திரைப்படத்தில், தனது எதார்த்தமான நடிப்பால் பலரது பாராட்டுகளையும் அள்ளிய ஜாக்கி ஷெரப் தற்போது கோச்சடையான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ரஜினிகாந்த், ஜாக்கி ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்கள், இருவரும் உத்தர் தக்ஷின் என்கிற ஹிந்தி திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். தற்போது பல வருடங்கள் கழித்து ரஜினியுடன் இணைந்து நடிப்பதில் ஜாக்கி மிகுந்த சந்தோஷத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. கோச்சடையான் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் லண்டனில் நடைபெறவுள்ளதாக இயக்குனர் சௌந்தர்யா கூறியுள்ளார். |
வெள்ளி, 3 பிப்ரவரி, 2012
கோச்சடையான் திரைப்படத்தில் ஜாக்கி ஷெரப்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக