வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

சிம்புவின் தீவிர ரசிகை நான்: தீக்ஷா


நான் சிம்புவின் தீவிர ரசிகை என்றும், அவர் என்னிடம் திகதிகள் கேட்டால் நான் உடனே ஒப்புக்கொள்வேன் என்றும் நடிகை தீக்ஷா கூறியுள்ளார்.
சிம்புவுடன் நடிக்க ஒப்பந்தமானால் கவனமாக இருக்கவேண்டும் என்று கொலிவுட் வட்டாரங்கள் எச்சரித்து வருகின்றன.
இந்நிலையில் நடிகை தீக்ஷா, நடிகர் சிம்புவுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
சிம்புவுடன் நடிக்க ஒப்புக் கொள்வதில் சற்று எச்சரிக்கையாக இருங்கள் என்று அவரது முகாமையாளர் ஒருவர் அவருக்கு அறிவுறை கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள தீக்ஷா கூறுகையில், நான் சிம்புவுடைய தீவிர ரசிகை, யார் என்ன சொன்னாலும் நான் கேட்க மாட்டேன்.
சிம்பு என்னிடம் திகதிகள் கேட்டால் அடுத்த வினாடியே கொடுப்பேன் என்று அவர் உற்சாகமாக சொன்ன செய்தி காற்று வாக்கில் சிம்புவின் காதுகளுக்கு சென்றுள்ளது.
இதனால் தன்னுடைய வேட்டை மன்னன் திரைப்படத்தில் தீக்ஷாதான் நடிக்க வேண்டும் என்று சிம்பு கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக