வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

தயாரிப்பாளர்கள் சங்க பிரச்சினைகளுக்கு பின்பு துப்பாக்கி படப்பிடிப்பு தொடங்கும்


துப்பாக்கி திரைப்படத்திற்கான படப்பிடிப்பு, தயாரிப்பாளர்கள் சங்க பிரச்சினைகளுக்கு பின்பு தொடங்கப்படும் என்று ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
கொலிவுட்டில் நண்பன் வெற்றிக்குப்பிறகு இளையதளபதி விஜய் துப்பாக்கி திரைப்படத்தில் நடிக்கிறார்.
துப்பாக்கி திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். காஜல் அகர்வால் விஜய்யுடன் இணைகிறார்.
துப்பாக்கி படப்பிடிப்பு மும்பையில் நடந்து வந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் பெப்ஸி தொழிலாளர்கள் சங்கத்திற்கும் இடையே பிரச்சினைகள் எழுந்தது.
இதனால் துப்பாக்கி திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் தள்ளிவைக்கப்பட்டது. இதுகுறித்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது, துப்பாக்கி திரைப்படத்தில் இளையதளபதி நன்றாக நடித்து வருகிறார்.
துப்பாக்கி திரைப்படத்திற்காக தன்னுடைய இயல்பான பாணியை விட்டும் விஜய் மாறுபட்டு நடிக்கிறார். தற்போது தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் பெப்ஸி தொழிலாளர்கள் சங்கத்திற்கும் இடையே பிரச்சினைகள் நடந்து வருவதால் துப்பாக்கி படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்சினைகள் முடிந்தவுடன் படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக