சனி, 10 மார்ச், 2012

விமர்சகர்களால் எனது பயணத்தை தடுக்க முடியாது: கௌதம் மேனன்


தனக்கு வந்த விமர்சனங்கள் குறித்து இயக்குனர் கௌதம் மேனன் டுவிட்டரில் பதிலளித்துள்ளார்.
கொலிவுட்டில் சிம்பு, திரிஷா நடித்த விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படம் காதலர்களுக்கு மத்தியில் இன்னும் பிடித்தமான திரைப்படமாக உள்ளது.
கொலிவுட்டில் வெற்றியடைந்த விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தினை கௌதம், பாலிவுட்டில் ஏக் தீவானா தா என்ற பெயரில் மறுபதிப்பாக வெளியிட்டார்.
ஆனால் பாலிவுட்டில் இத்திரைப்படம் தோல்வியை சந்தித்தது. மேலும் இதுகுறித்து விமர்சகர்கள் தங்களது விமர்சனங்களை தெரிவித்தனர்.
இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் கௌதம் தனது டுவிட்டர் இணையத்தில், விமர்சகர்களைப் பற்றி கவலை இல்லை. அவர்கள் தங்களது வேலையை செய்கிறார்கள். எப்போதுமே என் படங்களுக்கு நல்லபடியான விமர்சனங்கள் வந்ததில்லை என்று தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து சர்ச்சை நீடித்து வந்ததால் மீண்டும் கெளதம் தனது இணையத்தில், பத்து முட்டாள்கள் சேர்ந்து ஒரு படத்தின் வெற்றியைத் தடுத்துவிடலாம். ஆனால் ஒரு படைப்பாளியின் பயணத்தை தடுத்துவிட முடியாது. அது தொடர்ந்து கொண்டே இருக்கும்.. என்று தெரிவித்திருக்கிறார்.
கெளதம் மேனன் இயக்கத்தில் 'நீதானே என் பொன்வசந்தம்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் வெளிவர இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக