![]() |
போக்கிரி ராஜா என்கிற படத்தை தமிழில் வெளியிட இருக்கும் பட அதிபர் மலேசியா பாண்டியன். மலையாளத்தில் மம்முட்டி, ப்ருத்விராஜ், ஸ்ரேயா உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த படம் போக்கிரி ராஜா. அதாவது இப்படத்தில் நடிக்கும் போதே மலையாளத்தை தவிர வேறு எந்த மொழியிலும் இப்படத்தை வெளியிடக் கூடாது என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் இந்த படத்தில் ஸ்ரேயா நடிக்க ஒப்புக்கொண்டதாகவும், அதை மீறி மலையாள பட அதிபர் தாமஸ் ஆண்டனி, இப்படத்தை தமிழில் ரிலீஸ் செய்ய இருக்கிறார். எனவே இப்படத்தை தமிழில் வெளியிடக் கூடாது என்று தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் கூறியிருந்தார். இந்நிலையில் இப்படத்தை தமிழில், ராஜா போக்கிரி ராஜா என்ற பெயரில் வெளியிட இருக்கும் பட அதிபர் மலேசியா பாண்டியன், ஸ்ரேயா மீது தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் புகார் ஒன்று கொடுத்திருக்கிறார். அதில், நான் தாமஸ் ஆண்டனியிடமிருந்து இப்படத்தை தமிழில் வெளியிட முறையாக பதிவு செய்திருக்கிறேன். எனக்கும் ஸ்ரேயாவுக்கு நேரடியாக எந்த ஒப்பந்தமும் கிடையாது. அப்படி இருக்கையில் என் திரைப்படத்தை அவர் தடை செய்ய முயற்சிப்பது எனக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தும். இதனை மீறி இப்படத்தை எந்த ஒரு தனி நபரோ(ஸ்ரேயா) அல்லது எந்த ஒரு அமைப்போ என் படத்தை தடை செய்ய முயன்றால், எனக்கு ஏற்படும் நஷ்டங்களுக்கு அவர்களே பொறுப்பாவார்கள். அப்படி முயற்சிப்பவர்கள் மீது நீதிமன்றத்தில் நஷ்ட ஈடு வழக்கு தொடருவேன் என்று கூறியிருக்கிறார். மேலும் இப்பிரச்னையில், தென்னிந்திய நடிகர் சங்கம், தாமஸ் ஆண்டனியிடம் பேசி ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று கூறியிருப்பதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. |
வெள்ளி, 9 மார்ச், 2012
ஸ்ரேயா மீது வழக்கு தொடருவேன்: மலேசியா பாண்டியன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக