வெள்ளி, 9 மார்ச், 2012

இயக்குனர் பாலாவிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்: அதர்வா


இயக்குனர் பாலாவின் 'எரிதணல்' படத்திற்காக நாயகன் அதர்வா தனது தோற்றத்தை மாற்றி நடித்து வருகின்றார்.
தமிழ் சினிமா உலகில் 'சேது','பிதாமகன்','நான் கடவுள்','அவன் இவன்' ஆகிய படங்களின் நடித்த கொலிவுட்டின் முன்னணி நாயகர்களின் தோற்றத்தை வித்தியாசமாக திரை ரசிகர்களுக்கு காண்பித்த இயக்குனர் பாலா.
இப்போது நாயகன் அதர்வாவை தனது கதாபாத்திரத்துக்கு பொருத்தமான வகையில் மாற்றி வருகிறார் என்கிறது சினிமா வட்டாரம்.
இயக்குனர் பாலாவின் வழிகாட்டுதலில் நாயகன் அதர்வா உணவு கட்டுப்பாட்டை கடைபிடித்து, உடற்பயிற்சி செய்து,கதாபாத்திரத்துக்கு தகுந்த மாதிரி தன்னை கனகச்சிதமாக மாற்றிக் கொண்டிருக்கின்றார்.
இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடியும் வரை அதர்வா இதே 'கெட்டப்பில்' இருப்பார். அதர்வாவின் கதாபாத்திரம் ரகசியத்தை இதுவரையில் பாதுகாத்து வருவதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இயக்குனர் பாலாவின் படத்திற்காக படக்குழு கடினமாக உழைத்து வருகிறது. பாலா சாரின் இயக்கத்தில் நடிப்பது எனது கனவாக இருந்தது. அவருடன் இணைந்து பணியாற்றியதில் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன்.
இப்போது அடுத்தக் கட்ட படப்பிடிப்புக்காக தயாராகி வருகிறோம்' என்று 'எரிதணல்' பட நாயகன் அதர்வா கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக