சனி, 3 மார்ச், 2012

புதுமுகங்கள் அறிமுகமாகியுள்ள நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படம்


நான்கு நண்பர்களின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” திரைப்படம் அமைந்துள்ளது.
கொலிவுட்டில் “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” திரைப்படத்தை பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ளார்.
தென்மேற்கு படத்தில் நடித்த விஜய் சேதுபதி இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். இவருடன் இணைந்து பகவதி பெருமாள், விக்னேஷ்வரன், ராஜ்குமார் ஆகிய 3 புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள்.
பெங்களுரைச் சேர்ந்த காயத்ரி என்பவர் நாயகியாக நடிக்கிறார். இவர் ரேணிகுண்டா இயக்குனரின் “18 வயசு” மற்றும் “பொன்மாலைப் பொழுது” போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துவருகிறார்.
நான்கு நண்பர்களுக்கு இடையே நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படத்தை பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ளார்.
இப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் வேத்சங்கர் இசையமைத்துள்ளார். இவர் ஏ.ஆர்.ரஹ்மான் இசைப்பள்ளியில் படித்தவர் ஆவார்.
பசங்க திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்த சி.பிரேம்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்.கோவிந்தராஜ் திரைப்படத்தை தொகுத்து வழங்கியுள்ளார்.
சிங்கம், பயணம் போன்ற படங்களில் கலை இயக்குனராக பணியாற்றிய கதிரின் உதவியாளர் ஜி.வீரமணி கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக