வெள்ளி, 2 மார்ச், 2012

தயாரிப்பாளருடன் பிரகாஷ்ராஜ் கருத்து வேறுபாடு


பிரகாஷ்ராஜ், தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜு இருவரும் நண்பர்களாக இணைந்து ‘பயணம்’ என்ற படத்தை தெலுங்கில் தயாரித்தார்கள்.
இதனையடுத்து ‘சீதம்மா வகிட்லோ சிருமல்லே செட்டு’ என்ற தெலுங்கு படத்தை தயாரிக்கிறார் ராஜு.
இதில் அண்ணன், தம்பியாக நடிக்கும் வெங்கடேஷ், மகேஷ்பாபு இவர்களின் தந்தை வேடத்தில் நடிக்க பிரகாஷ்ராஜ் ஒப்புக்கொண்டார்.
மேலும் கடந்த பெப்ரவரி மாத இறுதியில் குற்றாலத்தில் தொடங்கிய படப்பிடிப்பில் பிரகாஷ்ராஜ் கலந்துகொள்ளவில்லை.
இதற்கு காரணம் கேட்டபோது, பிரகாஷ்ராஜ், தில் ராஜு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டதாக டோலிவுட் வட்டாராங்கள் தெரிவித்தன.
இதையடுத்து ராஜு தயாரிக்கும் படத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்க மறுத்து வெளியேறிவிட்டதால், தந்தை வேடத்தில் நடிக்க புதிய நாயகனைத் தேடிவருகின்றனர் படக்குழுவினர்.
ஏற்கனவே இப்படத்தில் மகேஷ்பாபுவின் அண்ணி வேடத்தில் நடிக்க மறுத்து அனுஷ்கா, த்ரிஷா போன்றவர்கள் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக