சனி, 10 மார்ச், 2012

நியூயார்க்கில் எடுக்கப்படும் என்றென்றும் புன்னகை படம்

என்றென்றும் புன்னகை படத்தை நியூயார்க், ஷீசெல்ஸ் தீவுகளில் நடத்த இயக்குனர் அஹமத் திட்டமிட்டுள்ளார்.
கொலிவுட்டில் வாமனன் பட இயக்குனர் அஹமத், தமிழில் ஜீவா, த்ரிஷா இருவரின் நடிப்பில் 'என்றென்றும் புன்னகை' படத்தை இயக்குகிறார்.
இப்படத்துக்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
என்றென்றும் புன்னகை திரைப்படத்தை நியூயார்க்கில் நடத்த இயக்குனர் அஹமத் திட்டமிட்டுள்ளார்.
இதுகுறித்து இயக்குனர் அஹமத் கூறியதாவது, இது எந்த வகை படம் என வகைப்படுத்த முடியாது. கலகலப்பான காதல் பொழுது போக்கு இசை சித்திரம் என்று கூறலாம்.
அப்பா-மகன் பாசப்பிணைப்பை பேசும் இப்படத்தில் நாசர் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
படத்தில் லிசா ஹைடன் முக்கியமான கதாப்பாத்திரத்தில் வருகிறார். தற்போதைய வாழ்க்கை சூழலை இப்படத்தில் பதிவு செய்கிறோம்.
நியூயார்க் மற்றும் ஷீசெல்சில் படக்காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளோம் என்று இயக்குனர் அஹமத் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக