கொலிவுட்டில் இயக்குனர் பாலாவிடம் சேது, நந்தா, பிதாமகன், நான்கடவுள் அவன் இவன் ஆகிய ஐந்து படங்களில் துணை இயக்குனராக ரவி பணியாற்றியுள்ளார். ஆச்சார்யா என்ற படத்தை இயக்கியதன் மூலம் ஆச்சர்யா ரவி என்று கொலிவுட்டில் புனைப்பெயர் பெற்றார்.தற்போது ஆச்சர்யா ரவி, கடந்த கால கதை ஒன்றை இயக்க உள்ளார். 1978ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு முடிந்த பின்பு, பி.யூ.சி படிப்பு இருந்த காலத்தில் நடக்கும் பள்ளிக்கூட நிகழ்ச்சிகளை திரைப்படமாக தொகுக்க உள்ளார். 40 வயதிற்கு மேற்பட்டோர் தங்களது கடந்த கால பள்ளி வாழ்க்கையை ரசிக்கும் விதமாக அமையும் என்றும் தற்போதைய தலைமுறையினர் ஆச்சர்யப்படும் விதமாகவும் படம் அமையும் என்றும் ரவி தெரிவித்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் என அனைத்தையும் முடித்த கையோடு நாயகனை தேடி வருகிறார் இயக்குனர். அந்த காலத்து 10ம் வகுப்பு படித்த தோற்றம் கொண்ட இரண்டு மூன்று மாணவர்களை தேடி வருவதாக ரவி தெரிவித்துள்ளார். அதற்காக aachrya.ravi@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரியையும் வெளியிட்டுள்ளார்.   ![]()   ![]()  | 
சனி, 3 மார்ச், 2012
புதுமுகம் தேடும் ஆச்சார்யா ரவி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ஆச்சார்யா என்ற படத்தை இயக்கியதன் மூலம் ஆச்சர்யா ரவி என்று கொலிவுட்டில் புனைப்பெயர் பெற்றார்.
 
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக