![]() |
கொலிவுட்டில் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் துப்பாக்கி திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.![]() இப்படத்தில் காஜல் அகர்வால், ஜெயராம், வித்யூத் ஜம்வால், சத்யன் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். இப்படத்தில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக நாயகன் விஜய் நடித்து வருகிறார். கெளதம் மேனன், இயக்குனர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் மூவரின் படங்கள் என்றாலே படத்தின் தொகுப்பாளர் ஆண்டனியாக தான் இருக்கும். ஆனால் '7ம் அறிவு' படத்தின் தொகுப்பின் போது ஏ.ஆர்.முருகதாஸுக்கும் ஆண்டனிக்கும் இடையே சிறு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஆகையால் 'துப்பாக்கி' படத்தின் தொகுப்பாளராக பணியாற்ற ஸ்ரீகர் பிரசாத்தை முருகதாஸ் ஒப்பந்தம் செய்திருக்கிறார். மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், ஆய்த எழுத்து, ராவணன் உள்ளிட்ட படங்களை ஸ்ரீகர் பிரசாத் தொகுத்து வழங்கியுள்ளார். கன்னத்தில் முத்தமிட்டால் படத்தின் சிறந்த தொகுப்பிற்காக ஸ்ரீகர் பிரசாத் தேசிய விருதினை பெற்றது குறிப்பிடத்தக்கது. |
சனி, 3 மார்ச், 2012
துப்பாக்கியில் இணையும் ஸ்ரீகர் பிரசாத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக