வெள்ளி, 9 மார்ச், 2012

இரண்டாம் உலகம் படத்தில் இரு வேடங்களில் ஆர்யா


இரண்டாம் உலகம் திரைப்படத்தில் நாயகன் ஆர்யா இருவேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
கொலிவுட்டில் செல்வராகவன் இயக்கும் ‘இரண்டாம் உலகம்’ படத்தில் ஆர்யாவும், அனுஷ்காவும் நடிக்கின்றனர்.
இப்படத்தில் அனுஷ்கா இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இப்போது ஆர்யாவும் இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இப்படத்தின் படப்பிடிப்புகள் பெரும் பகுதி முடிவடைந்துள்ள நிலையில் இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் கோவாவில் நடைபெறுகிறது.
இரண்டாம் உலகம் குறித்து ஆர்யா கூறுகையில், சினிமாவில் வெற்றி பெற வேண்டுமென்றால் எலி மாதிரி வேகமாக ஓடுவது முக்கியமல்ல, ரொம்ப தூரம் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும்.
அப்பொழுதுதான் வெற்றி பெற முடியும். நான் அதே மாதிரி ஓடுவதற்கு தயாராகிவிட்டேன். இப்படத்தில் என்னுடைய கதாபாத்திரம் என்னுடைய வாழ்வில் மறக்க முடியாததாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக