சனி, 10 மார்ச், 2012

விஜய்க்கு பதிலாக அஜ்மல்


நடிகர் விஜய்க்காக உருவாக்கிய கதையில் தற்பொழுது அஜ்மல் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இயக்குனர் ருத்ரன், வெற்றி செல்வன் என்ற பெயரில் ஒரு புதிய படத்தை உருவாக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் அஜ்மலும், அவருக்கு ஜோடியாக ராதிகா ஆப்டேவும் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் கதையை முதலில் விஜய்க்காக தான் உருவாக்கினாராம் ருத்ரன். கதையையும் விஜய்யிடம் கூற அவரும் நடிப்பதாக சொல்லியிருந்தார்.
இந்நிலையில் சில பல காரணங்களால் விஜய் நடிக்க முடியாமல் போக, அவருக்கு பதிலாக அஜ்மலை நடிக்க வைத்திருக்கிறார்.
இப்படத்தின் படபிடிப்பு நடந்து கொண்டிருக்கின்றது. மதன் கார்கி பாடல் வரிகள் எழுத, மணிசர்மா இசையமைத்து வருகிறார்.
முன்னதாக இப்படத்திற்கு 3வது முறையாக தலைப்பை மாற்றியிருக்கிறார் இயக்குநர். ஏற்கனவே ரணம் என்று வைத்து, பின்னர் சத்யவான் என்று மாற்றி, இப்போது வெற்றி செல்வன் என்று வைத்திருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக