இப்படத்தை மகத்தின் நண்பரும், தயாரிப்பாளருமான துரை தயாநிதி அழகிரி தயாரிக்கிறார். இதுகுறித்து மகத் கூறியுள்ளதாவது, தயாநிதி அழகிரி படத்தில் நான் நடிக்க இருப்பது உண்மை தான்.இப்படத்தை இயக்குநர்கள் கதிர் மற்றும் பாலாவிடம் உதவியாளராக இருந்த ஆதிரூபன் என்பவர் இயக்குகிறார். இதில் நான் கல்லூரி மாணவன் கதாபாத்திரத்தில் வருகிறேன். இப்போது படத்திற்கான நாயகி மற்றும் பிற தொழில்நுட்பர்களையும் தொடர்பு கொண்டு வருகிறோம் என்றும் இதன் படப்பிடிப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் துவங்க இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். மேலும் மங்காத்தாவில் ஐந்து பேரில் ஒருவராக வந்ததால், மகத் தனியாக தெரியவில்லை. ஆனால் இப்போது கதாநாயகனாக அவதரிக்க இருப்பதால் தனது உடம்பை உடற்பயிற்சியின் மூலமாக மெருகேற்றி இருக்கிறார் என்று தகவல் வெளிவந்துள்ளன  | 
சனி, 3 மார்ச், 2012
தயாநிதி தயாரிப்பில் நாயகன் மகத்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இதுகுறித்து மகத் கூறியுள்ளதாவது, தயாநிதி அழகிரி படத்தில் நான் நடிக்க இருப்பது உண்மை தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக