வெள்ளி, 9 மார்ச், 2012

தேசிய விருதுகள் கிடைக்காததால் கவலையில் மாலிவுட்


தேசிய விருதுகள் கிடைக்காததால் மாலிவுட் என்று அழைக்கப்படும் கேரள திரையுலகம் கவலையில் உள்ளது.
59வது தேசிய விருதுகள் நேற்று புதுடெல்லியில் அறிவிக்கப்பட்டன.
சிறந்த திரைப்படத்திற்கான விருதை மராத்தி திரைப்படம் வென்றது. சிறந்த பிராந்திய மொழி திரைப்படமாக, வாகை சூடவா, சிறந்த பொழுதுபோக்கு பட விருதை அழகர்சாமியின் குதிரை வென்றது.
இப்படத்தில் நடித்த அப்புக்குட்டி, சிறந்த துணை நடிகருக்கான விருதை பெற்றார். மேலும் ஆரண்ய காண்டத்திற்கு 2 விருதுகள் என்று தமிழ்த் திரைப்படங்கள் விருதுகளை அள்ளின.
இந்நிலையில் மலையாள திரைப்படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட வில்லை. இதனால் மலையாள திரையுலகம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
ஆனால், பாலிவுட்டில் வெளியான டர்ட்டி பிக்சர் படத்தில் நடித்த வித்யா பாலன் சிறந்த நடிகை விருதை பெற்றார். இவர் கேரளத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பியரி மொழியில் உருவான பியாரி படத்தை இயக்கிய மலையாள இயக்குனர் சுவீரனுக்கு சிறந்த இயக்குனர் விருதும், மராத்தி மொழித் திரைப்படமான தியோலில் நடித்த மலையாள நடிகை மல்லிகாவிற்கு சிறப்பு விருதும் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக