கொலிவுட்டில் தனுஷ், ஜெயம் ரவி, விஜய் என முன்னணி நாயகர்களுடன் நடித்து முன்னணி நாயகிகள் பட்டியலில் நாயகி ஹன்சிகா இடம் பிடித்துள்ளார். தற்போது சிங்கப்பூரை சேர்ந்த தமிழ் சங்கம் 'DREAM GIRL OF TAMIL CINEMA' என்ற பட்டத்தினை வழங்கி இருப்பதால் ஹன்சிகா சந்தோஷத்தில் இருக்கிறார்.நாயகி ஹன்சிகா, 2011ம் ஆண்டைப் போலவே 2012ம் ஆண்டும் நல்ல படங்களாக நடித்து பட்டத்தினை தக்க வைக்க வேண்டும் என்ற மும்முரத்தில் இருப்பதாக கொலிவுட்டிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. ஹன்சிகா நடிப்பில் 2012ம் ஆண்டின் முதல் படமாக, உதயநிதி ஸ்டாலின் நாயகனாக அறிமுகமாகும் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' வெளிவர இருக்கிறது. அப்படத்தினை தொடர்ந்து சூர்யா நடிக்க இருக்கும் 'சிங்கம் 2', சிம்பு நடித்து வரும் 'வேட்டை மன்னன்' உள்ளிட்ட படங்கள் வெளிவர இருக்கின்றன. மேலும் சுந்தர்.சி, விஷால் இணையும் படத்தின் நாயகியாகவும் ஹன்சிகா இருக்கலாம் என்றும் கொலிவுட்டில் கூறியுள்ளார்கள்.  | 
சனி, 3 மார்ச், 2012
ஹன்சிகாவுக்கு கிடைத்த கனவு நாயகி பட்டம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தற்போது சிங்கப்பூரை சேர்ந்த தமிழ் சங்கம் 'DREAM GIRL OF TAMIL CINEMA' என்ற பட்டத்தினை வழங்கி இருப்பதால் ஹன்சிகா சந்தோஷத்தில் இருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக