![]() |
திரையுலக நட்சத்திரங்கள் இணைய தளங்களில் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வளைத் தளங்களை பயன்படுத்துகின்றனர்.![]() ஆனால், இந்த விடயத்தை சில சமூக விரோத கும்பல் மோசடியாகவும் பயன்படுத்துகின்றனர். நடிகர், நடிகைகள் பெயரில் போலி கணக்கு தொடங்கி, ரசிகர்களுடன் அவர்கள் பேசுவது போல் தொடர்பு வைத்துள்ளார்கள். பல நடிகைகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது காஜல் அகர்வால் பெயரிலும் டுவிட்டரில் மோசடி நடக்கிறது. காஜல்அகர்வால் படங்களை அதில் போட்டு வைத்து ரசிகர்களுடன் காஜல் அகர்வால் பேசுவது போல் மோசடி கும்பல் பேசி வருகின்றனர். ஆபாச கேள்விகளுக்கு பதில் சொல்வது போன்றும் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அதை உண்மை என்று நம்பி தொடர்பு வைத்துள்ளனர். இது குறித்த விடயம் காஜல் அகர்வால் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதும் அவர் கோபம் அடைந்தார். ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வளைத்தளங்களில் நான் இல்லை. ஆனால் எனது பெயரை போலியாக பயன்படுத்தி மோசடி நடிக்கிறது. மோசடி நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன். அவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகிறோம் என்று கூறியுள்ளார். |
சனி, 10 மார்ச், 2012
காஜல் அகர்வால் பெயரில் டுவிட்டரில் போலிக் கணக்கு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக