![]() |
இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு எதிர்வரும் 12ம் திகதி தொடங்குகிறது. மும்பையில் நடைபெறும் சம்பவங்களை கதைக்களமாக கொண்ட இப்படம் ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது.![]() விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி இணைந்திருக்கும் முதல் படம் என்பதால் இந்த படத்துக்கு இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்திற்கு இசையமைத்து வரும் ஹாரிஸ் ஜெயராஜ் கூறுகையில், இப்படத்தில் மொத்தம் 5 பாடல்கள் என்றும், விரைவில் இப்படத்தின் தீம் மியூசிக் தயாராகி விடும் என்றும் தெரிவித்துள்ளார். பலபேர் இப்படத்தில் நடித்து வந்தாலும், இப்படத்தின் இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் நடித்திருப்பது சிறப்பம்சமான விடயமாக பேசப்படுகிறது. மேலும் விஜய் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதால், இப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் நடித்திருக்கிறார் என்று தகவல் வெளிவந்துள்ளது. |
வியாழன், 5 ஏப்ரல், 2012
விஜயுடன் நடிக்கும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக