திங்கள், 9 ஏப்ரல், 2012

சவாலான கதாபாத்திரத்தில் சாதிக்க முடியும்: தன்ஷிகா


கொலிவுட்டில் பேராண்மை, அரவான் படங்கள் பெயர் வாங்கி கொடுத்ததில் தன்ஷிகா மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார்.
ஆபத்தான காட்சிகளில் துணிந்து நடிக்கத் தயாராக இருக்கும் நடிகைகளில் தற்போது இவர் தான் முன்னணியில் இருக்கிறார்.
தமிழிலேயே பேசி நடிப்பதும், தன்னுடைய உயரமும் தான் எனக்கு ப்ளஸ் பாய்ண்ட் என்கிறார் தன்ஷிகா.
அவர் மேலும் கூறியதாவது, எனக்கு தமிழ் தெரியும் என்பதால் தான் பேராண்மை படத்தில் இயக்குநர் ஜனநாதன் சார் வாய்ப்பு தந்தார்.
மேலும் இப்படத்தில் என்னுடைய குணாதிசயங்களையும், நடிப்பையும் பார்த்து தான் இயக்குநர் வசந்தபாலன் சார் அரவான் படத்தில் வாய்ப்பு கொடுத்தார்.
என்னால் சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க முடியும் என்பதை இப்படத்தின் மூலம் நிரூபித்துள்ளேன்.
இருப்பினும் மற்ற நடிகைகள் மாதிரி கவர்ச்சியாகவும் என்னால் நடிக்க முடியும். மாஞ்சா வேலு படத்தில் அப்படித்தான் நடித்திருக்கிறேன்.
சென்னையில் வளர்ந்ததால் அரவான் படத்திற்கு கிராமத்து பெண்ணின் சாயல் வருவதற்கும், மதுரை பேச்சும் சரியாக வராமல் கஷ்டப்பட்டேன்.
மேலும் போட்டின்னா தனக்கு ரொம்ப பிடிக்கும் என்று கூறும் தன்ஷிகா தான் நடிச்ச மூன்று படங்களிலேயே விதவிதமான கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை என்று பெயர் கிடைத்ததால் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
மேலும் எந்த வேடத்திலும் என்னால் சாதிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக